இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையின் தரத்தை மொத்தமாக மாற்றப்போகும் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் பெரும் எதிர்பார்ப்புடன் துவங்கிய நிலையில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்து வருகிறது.
முதலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ-க்குப் போட்டியாகக் கௌதம் அதானியின் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் கடும் போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் அளித்தது. ஆனால் ஜியோ ஏர்டெல் மத்தியில் போட்டி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்திற்காக முகேஷ் அம்பானி, சுனில் மிட்டல் நிறுவனங்கள் கடுமையாகப் போட்டிப்போட்டு வருகிறது.
அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.. சுவிஸ் டெபாசிட் குறித்து நிதியமைச்சர் சொல்வதை பாருங்க!

டெலிகாம் துறை
மத்திய டெலிகாம் துறை தலைமையில் நடந்து வரும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் 16வது சுற்றின் முடிவில் அதாவது வியாழக்கிழமை வியாழக்கிழமை முடிவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் விற்பனை மூலம் 1,49,623 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஏலம்
இந்த ஏலத் தொகை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிக்கான ஸ்பெக்ட்ரம் தான். இப்பகுதி ஸ்பெக்ட்ரத்திற்கா முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டல்-ன் பார்தி ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு அலைக்கற்றை விலையைத் தாறுமாறாக அதிகரித்தது.

உத்தரப் பிரதேச
வியாழக்கிழமை 5G அலைக்கற்றைகளுக்கான ஏல விலை ₹169 கோடி அதிகரித்துள்ளன, உத்தரப் பிரதேசம் கிழக்கு பகுதிக்கான 1800MHZ அலைக்கற்றைக்கு ஜியோ, ஏர்டெல்,Vi மத்தியில் கடுமையான போட்டி நிலவியது. இதேபோல் சி பேண்ட் (3.3-3.67 GHz) மற்றும் ஹைய் பேண்ட் (26 GHz) ஸ்பெக்ட்ரத்திற்கு எதிர்பாராத போட்டி இருந்த காரணத்தால் ஏலம் நான்காவது நாளுக்குத் தொடர்ந்தது.

1.49 லட்சம் கோடி
வியாழன் அன்று 16வது சுற்றின் முடிவில் அரசாங்கம் ₹149,623 கோடியை ஈட்டியுள்ளது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசு 1.09 லட்சம் கோடி ரூபாயை வசூலித்தது.

அஸ்வினி வைஷ்ணவ்
தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிராமப்புறங்களுக்குச் சேவைகளைக் கொண்டு செல்வதில் தொழில்துறையும், டெலிகாம் நிறுவனங்களும் உறுதியாக உள்ளது எனத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச (கிழக்கு) பகுதி
உத்தரப் பிரதேச (கிழக்கு) பகுதியில் தான் இந்தியாவிலேயே அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது. இப்பகுதியில் மட்டும் சுமார் 101.54 மில்லியன் டெலிகாம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

10 சதவீத வாடிக்கையாளர்கள்
மே மாத இறுதியின் தகவல் படி இந்தியாவின் மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 10% உத்தரப் பிரதேச (கிழக்கு) பகுதியில் தான் உள்ளனர். இதனால் இந்தியாவில் அதிகம் லாபம் தரும் வட்டமாக இருப்பதால் இதைக் கைப்பற்ற போட்டியும் அதிகரித்துள்ளது.

ஜியோ, ஏர்டெல், VI
இந்த வட்டத்தில் 37.46 மில்லியன் பயனர்களுடன் ஏர்டெல் அதிக வாடிக்கையாளர்கள் தளத்தைக் கொண்டுள்ளது, ஜியோ 32.92 மில்லியன் பயனர்களுடன், Vi 20.23 மில்லியனுடன், மற்றும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) 10.91 மில்லியனுடன் உள்ளது. இருப்பினும், ஜியோ 48.2% அதிக வருவாய் சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது (RMS), ஏர்டெல் 39.9% இல் இரண்டாவது இடத்தில் உள்ளது மற்றும் Vi 9.4% உடன் பின்தங்கியுள்ளது.
Reliance Jio, Airtel battled for Uttar Pradesh East 5G band in spectrum Auction
Reliance Jio, Airtel battled for Uttar Pradesh East 5G band in spectrum Auction உத்தரப் பிரதேசத்திற்காக அடித்துக்கொண்ட முகேஷ் அம்பானி, சுனில் மிட்டல்..!