பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி; பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு: ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது பாதாள சாக்கடை குழியில் விழுந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம், முத்துமாரியம்மன் கோயில் தெரு, அம்மா உணவகம் எதிரே கழிவுநீர் கால்வாயில் கடந்த செவ்வாய் அன்று (28-ம் தேதி) அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பை சரி செய்யும் பணியில் தஞ்சாவூரைச் சேர்ந்த நெல்சன் (26), அதே மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (36) ஈடுபட்டனர். அப்போது பாதாள சாக்கடை குழியில் விழுந்து இருவரும் … Read more

உதய்பூர் கொலை | விசாரணையை தொடங்கியது என்ஐஏ – கன்னையா குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசு ரூ.51 லட்சம் நிதி

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) தனது விசாரணையை தொடங்கியது. இதில் குற்றவாளிகளைப் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்லிம்களின் இறைத் தூதர் முகமது நபி குறித்த நுபுர் சர்மாவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் பாஜக.வில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்காக, … Read more

மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை சட்டை இல்லாமல் பார்க்க சகிக்காது.. தன்னை கிண்டலடித்த தலைவர்களுக்கு புடின் பதிலடி..!

ரஷ்ய அதிபர் புடின் சட்டை அணியாமல் போஸ் கொடுத்ததை பிரிட்டன் மற்றும் கனடா நாட்டு பிரதமர்கள் கிண்டலடித்திருந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சட்டை அணியாவிட்டால் அவர்களை பார்க்க சகிக்காது என விளாடிமிர் புடின் விமர்சித்துள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டின் போது, புடினை விட நாம் கடுமையானவர்கள் என்பதை உலகிற்கு காட்ட அவரைப்போலவே சட்டை அணியாமல் குதிரை சவாரி செய்ய வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் … Read more

“நாட்டின் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் 8 ஆண்டுகளில் 20 மடங்கு உயர்வு” – பிரதமர் மோடி

இந்தியாவில் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் கடந்த எட்டாண்டுகளில் 20 மடங்கு அதிகரித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூரில் கட்டப்பட்டுள்ள போஷ் ஸ்மார்ட் வளாகத்தைப் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்காக இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். சூழலை மாசுபடுத்தாமல் இந்தியா வளர்ச்சியடைந்து வருவதாகவும், அரசின் அனைத்துச் செயல்பாடுகளிலும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டார். ஜெர்மனியின் போஷ் நிறுவனம் இந்தியாவில் தொழில்தொடங்கி … Read more

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில்

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் ராமரின் தூதனான அனுமன். இவர் ஒரு முறை ராமர் தந்த மோதிரத்துடன் சீதையை தேடி வானர வீரர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டு செல்கிறார். பசி, தாகத்தால் வானர வீரர்கள் களைப்படைந்த போது அவர்கள் கண்ணுக்கு ஒரு விசித்திரமான குகை ஒன்று தென்பட்டது. அந்த குகைக்குள்ளேயிருந்து தண்ணீரில் நனைந்தபடி பறவைகள் வருவதை பார்த்து விட்டு … Read more

கேரளாவில் நாய் கடித்து கல்லூரி மாணவி மரணம்

இந்திய மாநிலம் கேரளாவில் இளம்பெண் ஒருவர் நாய் கடித்ததால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கேரளா மாவட்டத்தில் உள்ள மங்காராவில் கல்லூரி மாணவர் ஒருவர் தேவையான தடுப்பூசியை எடுத்துக்கொண்ட போதிலும் ரேபிஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வியாழக்கிழமை உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். ஸ்ரீ லக்ஷ்மி என்ற 19 வயது பெண், தனது அண்டை வீட்டாரின் நாயால் கடிக்கப்பட்டதாகவும், அதன்பிறகு மருத்துவர்களின் பரிந்துரையின்படி தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் அவர் எடுத்துக்கொண்டதாகவும் அவரது உறவினர்களை மேற்கோள் காட்டி பொலிஸார் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,357,483 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.57 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,357,483 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 552,433,598 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 527,679,187 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,834 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முர்மு, சின்கா மனுக்கள் ஏற்பு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன. 107 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்  திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் … Read more

அக்னிபத் திட்டத்தில் சேர 2.72 லட்சம் பேர் பதிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர இதுவரை, 2.72 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். முப்படைகளுக்கு, நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், பொது மக்களிடம் ஆதரவு உள்ளது. இந்நிலையில், ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் தனித்தனியாக வீரர்கள் … Read more