யூரோ கிண்ணத்தை தட்டித்தூக்கிய இங்கிலாந்தின் பெண் சிங்கங்கள்: படைத்த சாதனை

யூரோ கிண்ணம் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் பெண் சிங்கங்கள் ஜேர்மனியைத் தோற்கடித்து, 1966க்குப் பிறகு சொந்த மண்ணில் மிகப்பெரிய சாதனையை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்தின் வெம்ப்லியில் 87,192 ரசிகர்கள் முன்னிலையில் குறித்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஜேர்மனி அணியுடன் Sarina Wiegman தலைமையிலான இங்கிலாந்து அணி மோதியுள்ளது. Ella Toone அடித்த கோல் இங்கிலாந்துக்கு இரண்டாவது பாதியில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய, ஜேர்மனியின் Lina Magull அந்த கனவை அடித்து … Read more

கால்நடைகளுக்கு குஜராத்திலும் பெரியம்மை நோய் பரவல்

அகமதாபாத்: இந்தியாவில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை தாக்கும் பெரியம்மை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், கால்நடை விற்பனை, சந்தைக்கு குஜராத் அரசு வரும் 21ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் உள்ள கட்ச், ஜாம்நகர், தேவபூமி, துவாரகா, ராஜ்கோட், பாவ் நகர், ஜூனாகத் உள்பட 17 மாவட்டங்களிலும் இந்த நோய் பரவியுள்ளது. இதனால், 1,240 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.இது குறித்து மாநில கால்நடை துறை அமைச்சர் ராகவ்ஜி படேல் கூறுகையில், `கடந்த … Read more

’எங்கள் கனவை அழித்தது அந்த பள்ளி நிர்வாகம்தான்!’ – கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை பேட்டி

சட்டம் சரியாக செயல்பட்டால் நாங்கள் ஏன் தனியாக போராடப் போகிறோம். அரசு அதிகாரிகள், காவல்துறையினரும் மெத்தனமாக நடப்பதற்கு காரணம் எங்களுக்கு புரியவில்லை. பள்ளிக் கல்வித்துறையில் இருந்து ஒரு அதிகாரி கூட இன்னும் எங்களை வந்து பார்க்கவில்லையே, ஏன்? – கள்ளக்குறிச்சி மாணவி தந்தை கேள்வி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதோடு காவல்துறை … Read more

சர்வதேச புலிகள் தினம்| Dinamalar

சர்வதேச புலிகள் தினமான நேற்று, பெங்களூரில் உள்ள பள்ளி ஒன்றில் புலிகள் போன்று முகமூடி அணிந்து போஸ் கொடுத்த மாணவர்கள். சர்வதேச புலிகள் தினமான நேற்று, பெங்களூரில் உள்ள பள்ளி ஒன்றில் புலிகள் போன்று முகமூடி அணிந்து போஸ் கொடுத்த ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், … Read more

‛வட சென்னை 2' எப்போது? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்

கடந்த 2018ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் வடசென்னை. இந்த படத்தில் தனுஷ் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தார். மேலும் இப்படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இப்படத்தை தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் வடசென்னை இரண்டாம் பாகம் குறித்து வெற்றிமாறன் புதிய அப்டேட் ஒன்றை தந்துள்ளார். நேற்று தனுஷின் திருச்சிற்றம்பலம் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு … Read more

EPFO News: உங்க பி.எஃப் அக்கவுண்டுக்கு இந்தத் தொகை வரப் போகுது; செக் பண்ணுங்க!

உங்களிடம் பிஎஃப் கணக்கு உள்ளதா? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களுக்குதான். இபிஎஃப் (EPFO) சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் ரூ.40 ஆயிரம் வட்டியாக பெற உள்ளார்கள். தங்களின் கணக்குகளில் ரூ.5 லட்சம் வைத்திருக்கும் அனைத்து சந்தாதாரர்களும் இந்தப் பணம் கிடைக்கவுள்ளது.இதற்கு நீங்கள் யூஏஎண் (UAN) என்ற எண்ணை உருவாக்க வேண்டும். இதை உருவாக்குவது மிக எளிது. ஆது குறித்து பார்க்கலாம்.1) முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface இணையதள முகவரிக்கு செல்லவும்.2) பக்கத்தின் வலதுபக்கம் தொழிலாளர்களின் நேரடி யூஏஎண் ஒதுக்கீடு என்பதை தேர்வு … Read more

அக்காவுடன் விளையாடி கொண்டிருந்த போது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கடப்பாக்கல் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இளவரசி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.  இந்த தம்பதியினருக்கு சுபத்ரா(வயது 9) என்ற மகளும், சுசிவின்ராஜ்(வயது 7), சுபிராஜ்(வயது 3) என்ற மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுபத்ரா தனது தம்பிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த … Read more

கரூரில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் முயற்சி: ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் 21 பேர் கைது

கரூர்: விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் 21 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும், மின்கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்பனபோன்ற எழுத்துமூலம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்ட சம்யுக்தா கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் … Read more