இலங்கை திரும்புகின்றார் கோட்டாபய ராஜபக்ச – வெளியாகியுள்ள தகவல்கள்

 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்பவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறி சிக்கப்பூரில் தங்கியுள்ளார். கடந்த 14ம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய அவர் இலங்கைக்கு சேவை செய்ய காத்திருப்பதாக தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி … Read more

ரஷ்ய கப்பல்களில் குவிக்கப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை: ஜனாதிபதி புடின் அதிரடி!

  அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பலுக்கு சிர்கான் ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்கும் பணி வரும் மாதங்களில் தொடங்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நகரில் ரஷ்யாவின் கடற்படை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், நாட்டின் பாதுகாப்பில் கடற்படையின் திறன், நமது இறையாண்மை மற்றும் சுகந்தரத்தை மீற முடிவு … Read more

ஆகஸ்ட் 2 முதல் 15ம் தேதி வரை சமூக வலைதள ‘டிபி’யில் தேசியக்கொடி வையுங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாள் என்பதால், ஆகஸ்ட் 2  முதல் 15 வரை மூவர்ணக் கொடியை சமூக ஊடக தளங்களில் தங்கள் கணக்குகளின்  சுயவிவரப் படமாக (டிபி) வைக்கும்படி மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று ஆற்றிய உரையில் பேசியதாவது: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ‘ஒவ்வொரு வீட்டிலும் மூர்வணக்கொடி’ ஏற்றுவதற்கான சிறப்பு … Read more

திருவள்ளூர் நர்சிங் மாணவி விடுதியில் தற்கொலை செய்த விவகாரம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதிராவேடு சாலை பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதில், படித்து வந்த ஈரோட்டை சேர்ந்த சுமதி என்ற மாணவி, கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே விரைவில் விடுதியை காலி செய்ய … Read more

இன்று(ஆக. 1) உலக காகித தினம்| Dinamalar

“ஆயுதம் செய்வோம். நல்ல காகிதம் செய்வோம். ஆலைகள் வைப்போம். கல்விச் சாலைகள் வைப்போம். ஓயுதல் செய்யோம். தலை சாயுதல் செய்யோம். உண்மைகள் சொல்வோம். பல வண்மைகள் செய்வோம்,” என ஆயுதத்திற்கு சமமாக காகிதத்தைக் கூறுகிறார் பாரதியார்.காப்பதற்கு ஆயுதம் போல் கற்பதற்கு காகிதம் துணை புரிகிறது. உண்மையில் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் நிறைய பேருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும்தான் புரட்சிக்கே வித்திட்டிருக்கின்றன. அன்று முதல் இன்று வரை கல்வி, கருத்து, கண்டுபிடிப்பு, செய்திகளை உலகத்தில் அனைவருக்கும் எடுத்துச் செல்லும் … Read more

கிரிக்கெட் மைதானத்தில் அதிரடி ஆட்டம் போட்ட கஸ்தூரி

கடந்த சில தினங்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அந்த போட்டியில் தொகுப்பாளியாக இடம்பெற்றுள்ளார் நடிகை கஸ்தூரி. இந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று கோவை மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் தான் நடிகை கஸ்தூரி இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் நடனமாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதோடு இதுதான் எனது ஸ்டைலில் உள்ள பிட்ச் ரிப்போர்ட் … Read more

117 பேரின் எலும்புக்கூடுகள் இந்தோனேஷியாவில் தகனம்| Dinamalar

ஜகர்த்தா : இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஹிந்துக்கள் பாரம்பரிய வழக்கப்படி, இறந்த 100க்கும் மேற்பட்ட வர்களின் எலும்புக் கூடுகளை ஒரே சமயத்தில் தகனம் செய்தனர். தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தோனேஷியாவில் உள்ளது பாலி தீவு. இங்கு உள்ள ஹிந்துக்கள், இறந்தவர்களின் உடல்களை முதலில் புதைத்து, சில காலத்திற்குப் பின், சவக்குழியில் இருந்து எலும்புகளை எடுத்து, மொத்தமாக தகனம் செய்கின்றனர். இந்த சடங்கு முடிந்த பின் தான், இறந்தவர்களின் ஆத்மா விடுதலை அடைந்து, புது வாழ்க்கையை … Read more

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் – 2021 யூன்

வரலாற்றில் உயர்ந்தளவிலான மாதாந்த ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான வீழ்ச்சி என்பவற்றின் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வணிகப்பொருள் வர்த்தக மீதி 2002 ஓகத்திலிருந்து முதற்தடவையாக 2022 யூனில் மிகையொன்றினை பதிவூசெய்துள்ளது. பயண ஆலோசனைகள் மற்றும் தற்போதைய எhpபொருள் பற்றாக்குறை மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுகள் என்பவற்றுடன் தொடர்புடைய எதிர்மறையான எண்ணங்களிற்கு மத்தியில் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் தாழ்ந்த மட்டத்திலிருந்து 2022 யூனில் அதிகரிப்பொன்றை (ஆண்டிற்காண்டு) பதிவூசெய்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 மேயூடன் ஒப்பிடுகையில் … Read more

காலி கோப்பையை 8 நொடிகளில் கண்டுபிடிச்சா… நிஜமாவே நீங்க ஷார்ப் பாஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர் வெறுமனே ஒரு பொழுதுபோக்கு புதிர்களாக மட்டும் இல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காலி கோப்பையைக் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க ஷார்ப் பாஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாகி இருப்பதால் புதிர்களுக்கான விடையை வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் ஒரு சூறாவளி போல … Read more

நடுக்கடலில் பழுதான விசைப்படகு: தமிழக மீனவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இலங்கை கடற்படையினர்

ராமேசுவரம்: நடுக்கடலில் விசைப்படகு பழுதானதால் தவித்த தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் உதவிய சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ராமேசுவரத்தைச் சேர்ந்த சேகர் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் சரவணன், அலெக்சாண்டர், அந்தோணி, முருகன், சுப்பையா, சசி என 6 பேர் சென்ற விசைப்படகு இன்ஜின் பழுது ஏற்பட்டு தலைமன்னார் அருகே தத்தளித்துக் கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை … Read more