தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்து.! 20 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தாராபுரத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. 

அப்பொழுது சோழமாதேவி அருகே செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் லாரியின் இருந்த தொழிலாளர்கள் என 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை மற்றும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.