‘ஏன் பொண்ணும் பொண்ணும், பையனும் பையனும்?’ – நட்சத்திரம் நகர்கிறது ட்ரெய்லர் வெளியீடு

பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’  படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்குப் பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது’ எனும் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், ஹரி, ஷபீர், வினோத், மைம் கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். யாழி ஃபிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா. இரஞ்சித் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கிஷோர்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். டென்மா இசையமைத்துள்ளார். செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

image

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. நாடகக் கம்பெனி ஒன்றில் நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் காதல் பற்றி நாடகம் போடலாம் என்று பேசிக்கொள்வதுபோல் ஆரம்பிக்கும் ட்ரெய்லரில், “தாலி கட்டுனா மட்டும் தான் நமது லவ் கன்டினியூ ஆகும்னா, நமது லவ்வோட வேல்யூ அவ்ளோதானா?, காதல்னா ஏன் பொண்ணும், பொண்ணும், பையனும், பையனும் லவ் பண்ணக் கூடாதா?, காதலுக்கு ஏதடா வயசு” என்பதுபோல், விதவிதமான காதல் வசனங்கள் கலந்த கதையுடன் காணப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.