க்ரைம் படத்தில் மாஸ்டர் பட நடிகர்.. கவர்ச்சி நாயகியும் இருக்காங்க.. எஸ்க்ளுசிவ் நேர்காணல்!

சென்னை: மினர்வா பிக்சர்ஸ் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் மணிகாந்த் தல்லகுடி இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன், ஷரத்தா தாஸ், நந்தா, அஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அர்த்தம். ஷரத்தா தாஸ் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகை மட்டுமல்லாமல் மாடல் அழகியும் ஆவார். இவர் 400க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவரது கவர்ச்சி போட்டோக்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நமது பிலீம்பீட் சேனலுக்கு நடிகை ஷரத்தா தாஸ், மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் அளித்த சிறப்பு பேட்டியை … Read more

சிறுவனின் சீருடையில் தீவைத்த அங்கன்வாடி ஆசிரியர்கள்

துமகூரு: துமகூரு மாவட்டம் சிக்கனாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட கோடேகெரே கிராமத்தில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படித்து வருகின்றனர். அங்கன்வாடியில் படிக்கும் சித்தார்த் என்ற சிறுவன் அடிக்கடி தனது உடையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் சிறுவனை விளையாட்டாக மிரட்டி வருவது வழக்கம். இந்த நிலையில் சிறுவன் தனது ஆடையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி ஆசிரியர்கள் விளையாட்டாக மிரட்டுவதாக கூறி சிறுவனின் சீருடையான … Read more

4 ஆண்டுகால ஐ.சி.சி. போட்டிக்கான ஒளிபரப்பு உரிமத்தை ஜீ நிறுவனத்துடன் பகிர்ந்தது டிஸ்னி ஸ்டார்

புதுடெல்லி, 2024-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு இறுதிவரை நடைபெறும் அனைத்து வகையான ஆண்கள் மற்றும் பெண்கள் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பு செய்வதற்கான டி.வி. மற்றும் டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்தது. இதற்காக அந்த நிறுவனம் ஏறக்குறைய ரூ.24 கோடி ஆயிரம் வழங்க வேண்டி வரும். இந்த நிலையில் நிதி சுமையை கருத்தில் கொண்டு இவற்றின் ஒளிபரப்பு உரிமத்தை ஜீ குழுமத்துடன் டிஸ்னி ஸ்டார், ஐ.சி.சி. ஒப்புதலோடு பகிர்ந்துள்ளது. அதாவது இந்த … Read more

சீனாவில் புதிதாக 1,829 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,696 பேருக்கு … Read more

நீலகிரியில் பரவலாக கனமழை: கல்லட்டி மலைப் பாதையில் 10 இடங்களில் மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், கல்லட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை 100 சதவீதத்தையும் தாண்டி அதிகமாக பெய்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி வருவதோடு, ஆறுகள் மற்றும் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், உதகையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக மார்க்கெட் பகுதிக்குள் … Read more

சோவியத் ரஷ்யாவின் கடைசி ஜனாதிபதி காலமானார்

பனிப்போரை மிக சாமர்த்தியமாக முடிவுக்கு கொண்டுவந்து சாதித்த மிகைல் கோர்பச்சேவ் கம்யூனிச கிழக்கு ஐரோப்பாவில் ஜனநாயக சார்பு போராட்டங்கள் வெடித்தபோது ஜனநாயகவாதியாக செயல்பட்டார் சோவியத் ரஷ்யாவின் முன்னாள் தலைவரான மிகைல் கோர்பச்சேவ் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போரை மிக சாமர்த்தியமாக முடிவுக்கு கொண்டுவந்து சாதித்த மிகைல் கோர்பச்சேவ் தமது 91ம் வயதில் மரணமடைந்துள்ளார். @getty பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்து சாதித்தாலும், மிகைல் கோர்பச்சேவ்வால் சோவியத் ஒன்றியம் சின்னாபின்னமாவதை தடுக்க முடியாமல் … Read more

பார் கான்ட்ராக்டர் கொலையில் கூலிப்படை தலைவனின் தூக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு: 25 ஆண்டுகளுக்கு எந்த சலுகையும் கிடையாது

மதுரை: பார் கான்ட்ராக்டர் கொலையில் கூலிப்படை தலைவன் கட்டை ராஜாவின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த ஐகோர்ட் கிளை, 25 ஆண்டுகளுக்கு எந்தவித சலுகையும் கோர முடியாது என கூறியுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே சென்னியமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (23). பார் கான்ட்ராக்டரான இவர், கடந்த 2013ல் மாடாகுடி அருகே கொலை செய்யப்பட்டார். இவரை, திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ராஜா (எ) கட்டை ராஜா (41), கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து … Read more

பொருளாதார நிபுணர் அபிஜித் சென் மறைவு

புதுடெல்லி: பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்ட ஆணையத்தின் உறுப்பினருமான அபிஜித் சென் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். நாட்டின் பிரபல கிராமப்புற பொருளாதார நிபுணர் அபிஜித் சென். இவர் மன்மோகன் சிங் பிரதமராக இரந்தபோது 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை திட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். 2010ம் ஆண்டு இவருக்கு ஒன்றிய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 2104ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீண்ட கால தானியக் … Read more

கோப்ரா நாளை ஹவுஸ்புல்..படம் பார்க்க லீவு வேண்டும்..கல்லூரி மாணவனின் அலப்பறை!

சென்னை : கோப்ரா படம் பார்க்க லீவு கேட்டு கல்லூரி மாணவர் எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை உலகம் முழவதும் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாளினி ரவி, மீனாட்சி, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார், மேலும் அவரது பாடல்கள் ஒரு வருடமாக இசை மேடைகளில் ஆட்சி செய்து வருகின்றன. … Read more

ஜே.பி. நட்டா தலைமையில் நடந்த பேரணியில் பங்கேற்க சென்ற பா.ஜ.க.வினர் மீது தாக்குதல்: 40 பேர் படுகாயம்

அகர்தலா, திரிபுராவில் இந்த ஆண்டு இறுதியில் கிராம பஞ்சாயத்து தேர்தலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கிறது. இதையொட்டி திரிபுராவின் மேற்கு மாவட்டமான குமுல்வங்கில் நேற்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் பிரசார பேரணி நடைபெற்றது. இந்த நிலையில் இந்த பேரணியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் பா.ஜ.க தொண்டர்கள் 40 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு … Read more