கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 2.12 லட்சம் கனஅடி நீர்திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் விநாடிக்கு 2.12 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து நேற்று மாலை விநாடிக்கு 2.12 லட்சம் கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1.35 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து நேற்று மாலைவிநாடிக்கு 1.75 … Read more

பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்ளும் போது ஆதார், பான் வைத்து வயதை உறுதிப்படுத்த அவசியமில்லை; மைனர் பெண் பலாத்கார வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி:  டெல்லியில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளைஞர் தரப்பில், ‘‘சிறுமியும், இளைஞரும் பரஸ்பர சம்மதத்துடனே உறவு கொண்டுள்ளனர். ஆனால், அந்த சிறுமி 18 வயதுக்கு குறைவானர் என்பதால் பலாத்கார வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறுமிக்கு அதிகாரப்பூர் … Read more

ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நடத்த கர்நாடகா ஐகோர்ட் அனுமதி :

பெங்களூரு: பெங்களூரில் உள்ள, ‘ஈத்கா’ மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நில விகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கர்நாடகா ஐகோர்ட் விநாயகர் சதூர்த்தி விழா நடத்த அனுமதி அளித்துள்ளது. கர்நாடகாவில், பெங்களூருவின் சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து, வக்போர்டுக்கும், மாநில வருவாய்த் துறைக்கும் இடையே பிரச்னை எழுந்தது. ஈத்கா மைதானம் வருவாய்த் துறைக்கே சொந்தம் என மாநகராட்சி அறிவித்தது. இதையடுத்து, சமீபத்தில் … Read more

அமலா பாலுக்கு பாலியல் தொல்லை: நண்பர் கைது

தமிழில் மைனா, வேட்டை, தலைவா, தெய்வத்திருமகள், வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலாபால் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடால்அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். தொடர்ந்து ஜெய்ப்பூரை சேர்ந்த பிரபல பாடகரும் தனது நண்பருமான பவிந்தர் சிங்கை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை பவிந்தர்சிங் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு பின்னர் … Read more

சோவியத் யூனியன் கடைசி தலைவர் மிக்கைல் கோர்பசேவ் காலமானார்| Dinamalar

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி தலைவரும், சீர்திருத்தவாதியுமான மிக்கைல் கோர்பசேவ், 91 உடல்நலக்குறைவால் காலமானார்.சிதறுண்ட சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்தார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாயின. 1990ம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் வயது … Read more

வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா..கமல்ஹாசனுக்கு நேரில் அழைப்பு!

சென்னை : சிம்புவின் வெந்து தணிந்தது காடு டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். செப்டம்பர் 15 ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி … Read more

தெலுங்கானாவில் கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட 4 பெண்கள் பலி – விசாரணைக்கு உத்தரவு

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் இப்ராகிம்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 25-ந் தேதி, பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. அதில் 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களில் 4 பெண்கள் நேற்று முன்தினம் அடுத்தடுத்து பலியானார்கள். இதையடுத்து அப்பெண்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலியான பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும், ஒரு வீடும் வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில அரசு அறிவித்தது. குழந்தைகளின் படிப்பு செலவை … Read more

20 ஓவர் போட்டிகளில் முஜீப் உர் ரஹ்மான் புதிய சாதனை

சார்ஜா, 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் சார்ஜாவில் இன்று இரவு நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் (பி பிரிவு) அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் … Read more

வெள்ளக்காடான பாகிஸ்தான்: நிவாரண பொருட்களுடன் சென்ற ஹெலிகாப்டர்கள் தரையிறங்க இடமில்லை – மந்திரி தகவல்!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி … Read more

தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரிப்பு.. நல்ல வாய்ப்பினை மிஸ் பண்ணிட்டோமோ?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்றும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 1750 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது. சற்று சரிவில் காணப்பட்டாலும் மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க டாலரின் மதிப்பானது அதன் 20 வருட உச்சத்தில் இருந்து சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் … Read more