செப் – 07 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஹிஸ்புல் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் போஸ்க்ரீரீ பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு வீரர்கள் அங்கு விரைந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனைதொடர்ந்து பதிலுக்கு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தனிஷ் பாத் மற்றும் கோகாப் … Read more

அ.தி.மு.க., விவகாரம்பன்னீர் மேல்முறையீடு| Dinamalar

புதுடில்லி, அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில், ஜூலை 11-ல் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இது தொடர்பாக, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 11ல் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பளித்தார்.தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, பழனிசாமி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த இரு நீதிபதிகள் … Read more

பொன்னியின் செல்வன் இசை வெளியீடு கோலாகலம் : திரண்ட திரைநட்சத்திரங்கள்

சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக படமாக இயக்கி உள்ளார் மணிரத்னம். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியதேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்னபழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், செம்பியான் மாதேவியாக ஜெயசித்ரா, மதுராந்தகனாக ரகுமான், வானதியாக நேகா துலிபாலா, பூங்குழலியாக ஐஸ்வர்ய லட்சுமி, பெரிய வேளாராக பிரபு, மலையமானாக லால மற்றும் பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் … Read more

உலக பணக்காரர்கள் பட்டியலில்சில மணி நேரம் இடம்பெற்ற சாமானியர்| Dinamalar

வாஷிங்டன்:வங்கிக் கணக்கில், தவறுதலாக 4 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து, சாமானியர் ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில், 25வது இடத்தில், ஒரு சில மணி நேரங்கள் இடம்பெற்ற சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியது.அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தை சேர்ந்தவர் டாரன். இவர், போலீஸ் துறையில் சில காலம் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான இவர், சாதாரண நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், டாரனின் வங்கியில் இருந்து, அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று சமீபத்தில் … Read more

குட்டி ஸ்டோரி சொல்றேன்னு இப்படி கும்மி அடிச்சிட்டியே.. ’வி’ நடிகரின் பேச்சால் கடுப்பான வேர்ல்ட்!

சென்னை: மூத்த நடிகரை வரிசையாக பலரும் பாராட்டி வந்த நிலையில், மேடையேறிய அந்த ‘வி’ நடிகர் வஞ்சப் புகழ்ச்சி அணி போல வச்சு செய்து விட்டதாக ட்ரோல்கள் குவியத் தொடங்கி உள்ளன. ‘வி’ நடிகர் பேச ஆரம்பித்ததில் இருந்தே மூத்த நடிகரின் ரியாக்‌ஷன்கள் முற்றிலுமாக மாறியதையும் சுட்டிக் காட்டி கலாய்த்து வருகின்றனர். நடிகரின் அந்த குட்டி ஸ்டோரியால் வேர்ல்ட் நடிகர் ரொம்பவே கடுப்பாகி விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. பாராட்டு மழை என்ன விழா என்றே தெரியாத … Read more

மின்வாரிய தேர்வு முறைகேடு; மேலும் 3 பேர் சிக்கினர்

பெங்களூரு: கர்நாடக மின்சாரத்துறையில் காலியாக இருந்த 600 இளநிலை பொறியாளர் பதவிக்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதி தேர்வு நடந்தது. பெலகாவி மாவட்டம் கோகாக்கில் ஒரு தேர்வு மையத்தில் நடந்த தேர்வில் சிலர் தேர்வின் போது முறைகேடு செய்து இருந்தனர். இதுகுறித்து கோகாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தந்தை-மகன் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை கோகாக் … Read more

ஒரே சீசனில் இரண்டு இரானி கோப்பை கிரிக்கெட் – இந்திய வாரியம்

இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளூர் போட்டிக்கான அட்டவணையை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இதன்படி ஒரே சீசனில் இரண்டு இரானி கோப்பை கிரிக்கெட் நடத்தப்படுகிறது. கொரோனா பரவலால் 2020-ம் ஆண்டு இந்த போட்டி நடத்தப்படாததால் அதற்கு ஈடுகட்டும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 2020-ம் ஆண்டு ரஞ்சி சாம்பியனான சவுராஷ்டிரா அணி இரானி கோப்பை கிரிக்கெட்டில் ரெஸ்ட் ஆப் இந்தியாவுடன் மோதும் ஆட்டம் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி … Read more

இலங்கை அதிபரின் அதிகார குறைப்பு மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

கொழும்பு, கோத்தபய ராஜபக்சே இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு சிறிசேனா அதிபராக இருந்தபோது அரசியல் சட்டத்தில் 19ஏ திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்க இந்த திருத்தம் வகை செய்கிறது. பின்னர் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே, அந்த திருத்தத்துக்கு மாற்றாக 20ஏ திருத்தம் கொண்டு வந்தார். அதில், நாடாளுமன்றத்தை விட அதிபருக்கே கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், அதிபரின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். … Read more