புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த திடீர் பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இன்று (30) காலை திடீர் பணிப் பிஷ்கரிப்பை முன்னெடுத்தனர். இதனால் இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த அனைத்து ரயில்களும் தாமதமாவதற்கு அல்லது பயணிக்காமல் இருப்பதற்கு இடமுண்டு என்று புகையிரத திணைக்களம் தெரிவித்திருந்தது. புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான பிரச்சினையே இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதேவேளை, சற்று முன்னர் இந்த பணிப் பிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.