Month: September 2022
கொந்தகை முதுமக்கள் தாழியில் இரும்பு வாள் கண்டெடுப்பு: போர் வீரனை புதைத்திருக்க வாய்ப்பு
திருப்புவனம்: கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் 40 செமீ நீளம் கொண்ட இரும்பு வாள் கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் 3ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கொந்தகையில் மொத்தம் 143 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 107வது முதுமக்கள் தாழி நேற்று தமிழக தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் … Read more
மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை தமிழக அரசு மேம்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
சென்னை: மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை தமிழக அரசு மேம்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் தொல்லியல் சிறப்பிடங்களை இணைக்கும் வகையிலான தொல்லியல் சுற்றுலா திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை: இபிஎஸ் தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் எடப்பாடி தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனு மீதான விசாரணை தசரா விடுமுறைக்கு பின் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அளித்த அனுமதியை மறுஆய்வு செய்யகோரிய வழக்கு தள்ளிவைப்பு.!
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more
இன்னும் எத்தனை நாள் தமிழக மீனவர்கள் இலங்கையினரால் துயரம் அனுபவிப்பார்கள்-நீதிபதிகள் கேள்வி
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிட கோரியும், உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி விசாரணைக்கு … Read more
கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்.. மிரட்டல் கடிதம் எழுதிய ஆசாமியை பிடிக்க தனிப்படை
கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்.. மிரட்டல் கடிதம் எழுதிய ஆசாமியை பிடிக்க தனிப்படை Source link
3வது நாளாக ஊழியர்கள் போராட்டம்.. மின் சேவை பாதிப்பு.. பொதுமக்கள் அவதி..!
புதுச்சேரியில், மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த கால காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசு சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பியது. மேலும், தனியார் மயத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் மின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன், … Read more
வெளியானது சூப்பர் அறிவிப்பு.. குழந்தைகளுக்கு ரூ.4000 நிதியுதவி.. உடனே அப்ளை பண்ணுங்க..!
18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சார்ந்தவர்கள் நிதி ஆதரவுத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ நிதி ஆதரவுத் திட்டத்தின் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள், எச்.ஐ.வி உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், குழந்தைகள் இல்லங்கள், சிறப்பு இல்லங்களின் கண்காணிப்பாளரால் பரிந்துரை செய்யப்படும் குழந்தைகள், … Read more
பல மாதங்களாக வேலை இல்லை; விரக்தியில் மாடல் அழகி மும்பை ஹோட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை!
கொரோனாவுக்குப் பிறகு பாலிவுட்டில் வளர்ந்து வரும் பல நடிகர், நடிகைகள் போதிய பட வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மும்பை லோகண்ட்வாலா பகுதியைச் சேர்ந்த மாடல் அழகி அகான்ஷா மோகன் (30) என்பவர் அந்தேரி வர்சோவா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன் தினம் இரவு அறை எடுத்து தங்கினார். இரவில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டார். காலையில் ஹோட்டல் ஊழியர்கள் மாடல் அழகி தங்கியிருந்த அறையின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் … Read more