ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார்.

ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையிலுள்ள நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதி பேர்டினன்ட் ஆர். மார்க்கஸ்ஸை ( Ferdinand R. Marcos Jr.) நேற்று (29) காலை மணிலாவில் சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.மணிலாவில் உள்ள மலாக்கனங் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்களுக்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மகத்தான வரவேற்பு அளித்தார். இருநாட்டுத் தலைவர்களும் … Read more

மக்களே தெரிஞ்சிக்கோங்க… அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா?

அக்டோபர் மாதத்தில் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அக்டோபர் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிறுகள் உட்பட மொத்தம் 21 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது. அடுத்த மாதத்தில் மட்டும் 5 ஞாயிறுகள் உள்ளன. அதேபோல், தேசிய விடுமுறை – காந்தி ஜெயந்தி மற்றும் சரஸ்வதி பூஜை, தசரா-விஜயதசமி, தீபாவளி போன்ற பிற பண்டிகைகள் காரணமாக … Read more

பசி எடுக்கும்போது உணவு கிடைக்கலைன்னு இப்படியா? ஒரு இளைஞர் செய்த செயலை பாருங்க..!!

உ.பி மாநிலத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது விசித்திரமாக சில பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு அறுவை சிகிச்சை செய்துதான் அதை வெளியேற்ற முடியும் என விஜயிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அறுவை சிகிச்சைக்கு விஜய் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோதுதான் அவரது வயிற்றிலிருந்து ஸ்பூன் என்பது மருத்துவர்களுக்குத் தெரிந்தது. மேலும் அதில் … Read more

பென்ஷன்தாரர்களே, இன்றே கடைசி நாள்.. உடனே இதை செய்யுங்க..!

ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஆயுள் சான்றிதழை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழ் என்ற ஜீவன் பிரமான் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். கொரோனா பரவல் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு இந்த சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இன்று … Read more

ராமநாதபுரம்: அரசுப் பள்ளியில் வினாத்தாள் லீக்; பெண் தலைமை ஆசிரியை உட்பட மூன்று ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6,7,8 வகுப்புகளுக்கான அறிவியல் பாட முதல் பருவத் தேர்வு நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் அதற்கான வினாத்தாள் நேற்று முன்தினமே அந்த வகுப்புகளின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தேர்வுக்கு முன்னரே அறிவியல் வினாத்தாள் வெளியானது குறித்து ஆசிரியர் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியது. அதனையடுத்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிட்டார். லிக் செய்யப்பட்ட வினாத்தாள் அதன்படி ராமநாதபுரம் மாவட்டக் கல்வி … Read more

நில அபகரிப்பு புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கு ரத்து 

சென்னை: நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு … Read more

ஆர்.எஸ்.எஸ். பேரணி: திருமா மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறைக்கு அனுமதி அளிக்கும்படி ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் … Read more

அதிர்ச்சி கொடுத்த RBI; மீண்டும் உயரும் ரெப்போ விகிதத்தால் EMI அதிகரிக்கும்!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI)ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம், உங்கள் EMI தொகையும் அதிகமாகும். இப்போது ரெப்போ விகிதம் 5.40% லிருந்து 5.90% ஆகவும், SDF விகிதம் 5.15% லிருந்து 5.65% ஆகவும் அதிகரித்துள்ளது. பொருளாதார கொள்கைகளுக்கான (MPC)  6  உறுப்பினர்களில் 5 பேர் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஆதரவாக இருந்தனர். பணவீக்கம் இன்னும் அனைத்து துறைகளுக்கும் கவலை அளிக்கும் விஷயமாகவே உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்க பெடரல் … Read more

பொன்னியின் செல்வன் ரியாக்ஷன்; மாஸ்டர் ஸ்டைலில் ஏ.ஆர்.ரகுமான் ஆடும் டான்ஸ் வீடியோ வைரல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியானது. அதிகாலை முதல் காட்சியை பார்த்த கையோடு ரியாக்ஷனை பதிவிட்டு வரும் ரசிகர்கள், பொன்னியின் செல்வன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். நாவலில் வரும் பிரம்மாண்டத்தை எந்த விதத்திலும் கெடுக்காமல், அந்த கற்பனையை அப்படியே மணி ரத்னம் காட்சிப்படுத்தியிருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளனர். கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் சூப்பராக நடித்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளனர்.   — MD  (@Thalapathyvj_md) … Read more

Madras HC: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம்  மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் … Read more