உலகம் முழுவதும் வெளியானது ‘பொன்னியின் செல்வன் – 1

சென்னை: பிரமாண்டமாக உருவாகி, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். மேளதாளத்துடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பொன்னியின் செல்வன் – 1’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது தமிழ் சினிமாவின் கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’ இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், … Read more

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது..

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி டிசம்பர் 6-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. அதையொட்டி, பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள இன்று காலை ராஜகோபுரம் முன்பு வேதமந்திரங்கள் முழுங்க பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

தமிழகத்தில் பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொழில் செய்யும் இடங்கள் எத்தனை: டிஜிபி

சென்னை: தமிழகத்தில் பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொழில் செய்யும் இடங்கள் எத்தனை என்று டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் தற்காலிக, நிரந்தரமாக எத்தனை பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் ஓவொரு மாவட்டம் மாநகரங்களில் எவ்வளவு போலீஸ் பாதுகாப்பை வழங்கப்பட்டது என்றும் அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்

முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

மும்பை: முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக இந்திய உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், தற்போது இவருக்கு பாதுகாப்பு இசட் பிளஸ் வழங்கப்பட்டுள்ளது. இசட் பிளஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் அவருக்கு 58 கமண்டோ படையினர் பாதுகாப்பு வழங்குவார்கள். பாதுகாப்புக்காக செலவினங்களை முகேஷ் அம்பானி ஏற்பார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டருகே 20 … Read more

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ஃபேஸ்புக் மூலம் மோசடி: 45 பாஸ்போர்ட்கள் பறிமுதல்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் விளம்பரம் கொடுத்து மோசடி செய்த நபரிடம் இருந்து 45 பாஸ்போர்ட் பறிமுதல் செய்து, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் நல்லபெரட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வாசு என்பவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் ஆசையில் இருந்து உள்ளார். கூலி வேலை செய்து சேர்த்து வைத்த பணத்தை வைத்து முகநூல் மூலமாக கிடைத்த விளம்பரத்தை பார்த்து மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவர் கொடுத்த … Read more

சமஸ்கிருதத்திலும் தேடலாம்கூகுளுடன் புதிய ஒப்பந்தம்| Dinamalar

புதுடில்லி, :இணையதள தேடு இயந்திரமான, ‘கூகுள்’ தளத்தில், இனி சமஸ்கிருதத்திலும் தகவல்களை தேடலாம். இதற்காக, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இணையதள தேடு இயந்திரமான கூகுள் தளத்தில், ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் நமக்கு தேவையான தகவல்களை தேடிப் பெறலாம். இந்த வரிசையில், சமஸ்கிருத மொழியிலும் தகவல்களை தேடிப் பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்த, ஐ.சி.சி.ஆர்., எனப்படும் இந்திய கலாசார உறவு கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.சி.ஆர்., தலைவர் வினய் … Read more

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இன்று இணைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்-உக்ரைனில் தன் ராணுவத்தின் ஆதரவுடன், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பிராந்தியங்களை இன்று முறைப்படி தன் நாட்டுடன் இணைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக, உக்ரைன் ராணுவம் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு … Read more

தமிழ்நாடு வரும் வெளிநாட்டினரை தாக்க சதி: என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

புதுடெல்லி, ஐ.எஸ். போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகக்கூறி, ‘பி.எப்.ஐ.’ என்று அழைக்கப்படுகிற ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பை மத்திய அரசு நேற்று முன்தினம் அதிரடியாக தடை செய்தது. ஏற்கனவே இந்த அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் என தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) கடந்த 22-ந்தேதி அதிரடி சோதனைகளை நடத்தி 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். தொடர்ந்து 27-ந்தேதியன்று உத்தரபிரதேசம், கர்நாடகம், குஜராத், மராட்டியம் உள்ளிட்ட 8 … Read more

ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள்: 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 4-வது வரிசையில் களம் கண்ட இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் திரட்டி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். கடைசி வரை நிலைத்து நின்று அசத்திய சூர்யகுமார் யாதவ் சர்வதேச 20 ஓவர் போட்டியில் … Read more

இயான் புயலால் புளோரிடா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது: அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது. புயல் மீட்புப் பணிகளில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர் என புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார். இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் … Read more