சிபிஐ, என்சிபி.யின் ‘ஆபரேசன் கருடா’போதை பொருள் கடத்தல்; 6,600 நபர் மீது சந்தேகம்: 175 பேர் கைது

புதுடெல்லி:  சிபிஐ, என்சிபி மற்றும் மாநில போலீசார் இணைந்து நாடு முழுவதும் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீப காலமாக, நாட்டில பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகமாகி இருக்கின்றன. இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சர்வதேச அளவில் தொடர்பு கொண்டுள்ள  போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டறியவும், போதை பொருள் கடத்தலை தடுக்கவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் … Read more

5 வயது சிறுமி பலாத்காரம்: சிறுவன் கைது| Dinamalar

பாதோகி, :உத்தர பிரதேசத்தில், ௫ வயது சிறுமியை பலாத்காரம் செய்த, ௧௫ வயது சிறுவன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டான்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பாதோகி மாவட்டத்தில், சூர்யவா கிராமத்தைச் சேர்ந்த ௫ வயது சிறுமி, இரவில் தன் குடிசைக்கு வெளியே துாங்கினாள்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன், அச்சிறுமியை யாரும் இல்லாத இடத்துக்கு துாக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.இது குறித்து, அச்சிறுமி தன் பெற்றோரிடம் மறுநாள் … Read more

அனில் சவுகான், முப்படைகளின் தலைமை தளபதியானது எப்படி? – புதிய தகவல்கள்

புதுடெல்லி, இந்திய முப்படைகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் தலைமை தளபதி பதவியை உருவாக்க வேண்டிய தேவை கார்கில் போருக்குப்பின் உணரப்பட்டது. அதன்படி இந்திய முப்படைகளையும் நிர்வகிக்க முப்படை தலைமை தளபதியை தற்ேபாதைய மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி ஊட்டி அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். … Read more

டி20 போட்டியில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள்- ஷிகர் தவானின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்

திருவனந்தபுரம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடந்த முதல் டி20 போட்டியிலும் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சமீப காலமாக தொடர்ந்து ரன்களை குவித்து வரும் அவர். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துருப்பு சீட்டாக விளங்குகிறார். நேற்றைய போட்டியில் 50 ரன்களை எடுத்ததை தொடர்ந்து இந்த வருடம் 732 ரன்களை எடுத்துள்ள அவர், சர்வதேச டி20 … Read more

லட்சக்கணக்கானோருக்கு 'கிரீன் கார்டு' வழங்க மசோதா; அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

வாஷிங்டன், அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்கு வழங்கப்படும் ஆவணம், ‘கிரீன் கார்டு’ என அழைக்கப்படுகிறது. இந்த ‘கிரீன் கார்டு’ அமெரிக்காவில் வசிக்கிற வெளிநாட்டவர்க்கு பல்வேறு நன்மைகளைச் செய்கிறது. ஆனால் சமீப காலமாக இது கிடைப்பதில் கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா மற்றும் நீண்ட கால விசா வைத்திருப்போர் ‘கிரீன் கார்டு’ பெற ஏதுவான சட்ட மசோதாவை அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையில் ஆளும் … Read more

ரயில்வே ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!!

இந்தியாவில் மிகப்பெரும் அரசுத் துறையாக ரயில்வே செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் முந்தைய ஆண்டு செயல்பாட்டின் அடிப்படையில் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த போனஸ் ஆண்டுதோறும் துர்கா பூஜை மற்றும் தசராவுக்கு முன்னர் வழங்கப்பட்டு விடும். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூ.2081.68 ஒதுக்க … Read more

தென்காசி: திமுக மாவட்டச் செயலாளர் நியமனம் நிறுத்தி வைப்பு… பின்னணி என்ன?!

ஆளுங்கட்சியான தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவருகிறது. அதன்படி, பேரூராட்சி, நகரம், ஒன்றியம், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தல் பல பஞ்சாயத்துகளுக்கு இடையே நடந்து முடிந்தது. இதையடுத்து, அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டச் செயலாளர்கள் தேர்வுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செப்.,22-ம் தேதி தொடங்கியதால், அண்ணா அறிவாலயம் களைகட்டியது. அன்றைய தினமே, சிட்டிங் மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராகப் பலரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது அந்தக் கட்சி வட்டாரத்தில் பெரும் … Read more

ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் ஊர்வலம், கூட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது – தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும், ஊர்வலம் மற்றும் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினம், விஜயதசமியை முன்னிட்டு, வரும் அக். 2-ம் தேதி தமிழகம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து அசோக் கெலாட் விலகல் – சசி தரூர், திக் விஜய் சிங் இடையே போட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் தேர்தலில் போட்டியிடுகிறார். கடைசி நாளான இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங்கும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். டெல்லியில் நேற்று அவர் கூறும்போது, … Read more

5ஜி சேவையை வழங்க தயார் – டெல்லி சர்வதேச விமான நிலையம் தகவல்

புதுடெல்லி: 5ஜி சேவையை வழங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக டெல்லி விமான நிலையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் (டிஐஏஎல்) செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியதாவது: 5ஜி சேவைக்கான செல்போன் மற்றும் சிம் கார்டுடன் வரும் விமானப் பயணிகளுக்கு புது அனுபவம் காத்திருக்கிறது. அவர்கள் 5ஜி சேவையை பெறுவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக, சிறப்பான சிக்னல் வலிமை, தடையற்ற இணைப்பு, மிக விரைவான … Read more