காங்கிரஸ் தலைமை பதவிக்கான போட்டியில் இருந்து பின்வாங்கினார் அசோக் கெலாட்…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்த ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கி உள்ளார். தலைமை பதவிக்கு போட்டியிடவில்லை என்று அறிவித்து உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட மறுத்த … Read more

பண்ணைபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொது சுகாதார கழிவு நீர் தொட்டியில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழப்பு

தேனி: பண்ணைபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொது சுகாதார கழிவு நீர் தொட்டியில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளார். கழிவு நீர் தொட்டியின் மேல் ஏறி விளையாடியபோது சுபஸ்ரீ (8), நிகிதா (7) ஆகியோர் உள்ளே விழுந்தனர். சிறுமிகள் உடலை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சென்னையில் 1.60 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: சென்னையில் 1.60 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டு சிறை, ரூ. 10,000 அபராதம் விதித்தது. மீன்பிடி துறைமுக போலீசாரால் 2018-ல் கைதான புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதுமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் மூன்றாவது நாள் முத்து பந்தல் வாகனத்தில் ஸ்ரீ தேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் மூன்றாவது நாள் முத்து பந்தல் வாகனத்தில் ஸ்ரீ தேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளினார் மலையப்ப சுவாமி திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்ம வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்தார். மூன்றாவது நாளான இன்று இரவு முத்து எப்படி பரிசுத்தமானதோ அதை போன்று நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் … Read more

நாமக்கல்: ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி-ஓடிச்சென்று காப்பாற்றிய சிறுவர்கள்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மூதாட்டியை காப்பாற்றி பாதுகாப்புடன் மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-ஈரோடு செல்லும் காவிரி ஆற்றின் பாலத்தின் மீது நின்று தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் மற்றொரு முயற்சி நடைபெற்றுள்ளது. பள்ளிபாளையம் பேருந்து நிலைய பகுதியில் யாசகம் எடுத்து வந்த ஓமலூர் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த மூதாட்டி ராஜம்மாள், உடலில் உள்ள நோய் … Read more

”இந்தியாவின் இந்தப்பகுதியில் கனடா மக்கள் எச்சரிக்கையாக இருங்கள்” – கனடா அரசின் எச்சரிக்கை

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என கனடா அரசு அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடா அரசு இணையத்தளத்தில் பயண அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி கனடாவை சேர்ந்தவர்கள் இந்தியா சென்றால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளுக்கு பயணிப்பதை தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் அப்பகுதிகளில் கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் இருக்கும் அபாயம் இருக்கிறது. மேலும் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் செல்லும் … Read more

‘பொன்னியின் செல்வன் படத்தை ‘PS-1’ என விளம்பரப்படுத்த வேண்டாம்’ – படக்குழுவுக்கு நோட்டீஸ்

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ‘பி.எஸ்.-1’(PS-1 ) என விளம்பரப்படுத்த வேண்டாம் என படக்குழுவினருக்கு கோவையை சேர்ந்த வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம், திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் நாளை வெளியாக உள்ளது. இதையடுத்து இந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது முதல், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் என்பதை ‘பி.எஸ். -1’ என படத்தை … Read more

பி.டி.ஐ., இயக்குனர்கள் குழுவில் தினமலர் எல்.ஆதிமூலம் நியமனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பி.டி.ஐ., எனப்படும், ‘பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா’வின் இயக்குனர்கள் குழுவில் ஒரு இயக்குனராக, ‘தினமலர்’ நாளிதழின் பதிப்பாளர் எல்.ஆதிமூலமும், துணைத் தலைவராக கே.என்.சாந்தகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.நாட்டின் மிகப் பெரிய மற்றும் பழமையான செய்தி நிறுவனமாக பி.டி.ஐ., எனப்படும் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின், பல்வேறு பத்திரிகைகளின் உரிமையாளர்களால் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் கிடைக்கும் லாபத்தை, அதன் பங்குதாரர்கள் எடுத்துக் கொள்ளாமல், நிறுவனத்தின் வளர்ச்சி … Read more

முன்னணி நட்சத்திரங்களால் ஒதுக்கப்படுகிறாரா கரண் ஜோஹர் ?

பாலிவுட்டில் இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோஹர். கல்யாண வீடுகளில் தவறாமல் வாழை மரம் கட்டுவது போல பாலிவுட்டின் முக்கிய சினிமா நிகழ்வுகள் அனைத்திலும் தவறாமல் இடம் பெற்று வருபவர் தான் கரண் ஜோஹர். அதுமட்டுமல்ல மிகப்பெரிய படங்கள் வெளியாகும்போது இவர் நடத்தி வரும் காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சியில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் தவறாமல் கலந்து கொள்வதும் வழக்கம். இந்த நிலையில் காபி வித் கரண் சீசன்-7 நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் நிகழ்ச்சி … Read more

போலி பத்திரங்களை ரத்து செய்ய புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி பேட்டி

போலி பத்திரங்களை ரத்து செய்ய புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி பேட்டி Source link