2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்து தமிழ்நாடு அரசு…

சென்னை: 2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு  24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும். அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பொங்கல், தீபாவளி உள்பட 8 நாட்கள் சனி, ஞாயிறுகளில் வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் விடுமுறை நாட்கள் குறைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.