டெல்லி: வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. தற்போது 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகிறது. இந்நிலையில் வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள வேலை நாட்களில் வேலை நேரம் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.