புதுடில்லி :அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் மிக ஆபத்தான நிலையில் நின்றபடி ஜன்னலை சுத்தம் செய்யும் பெண்ணின் ‘வீடியோ’ வேகமாக பரவி வருகிறது.
இது பண்டிகை காலம் என்பதால் வீட்டை சுத்தம் செய்வது வெள்ளையடிப்பது உள்ளிட்ட பணிகளில் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில் பெண் ஒருவர் தன் வீட்டு ஜன்னலை சுத்தம் செய்யும் வீடியோ பரவி வருகிறது.
இதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கிறது என பலர் நினைக்கலாம். அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் வசிக்கும் அந்த பெண் வீட்டு ஜன்னலின் வெளிப்புறத்தில் மிக ஆபத்தான முறையில் நின்றபடி
ஜன்னலை சுத்தம் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது.
அந்த பெண்ணின் கால் சற்று இடறினாலும் அவர் தவறி கீழே விழுந்து உயிரிழக்கும் அபாயம் இருப்பதால் பலரும் தங்கள் அதிர்ச்சியை அந்த வீடியோவில் வெளிப்படுத்தி உள்ளனர்.
பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அது உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் கடந்த பிப். மாதம் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. அதை யாரோ இப்போது பகிர்ந்துள்ளனர்.காஜியாபாதில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் பெண்ணை அடையாளம் கண்ட அப்பகுதியினர் அவர் வீடு தேடி சென்று எச்சரித்துவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement