
நைகர் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 195 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக பெர்லின் நகரில் நேற்று பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது.

நியூயார்க் நகரில் செல்லப்பிராணிகளுக்காக ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் செல்லப் பிராணிகளுடன் மக்கள் ஆர்வத்துடன் பங்குகொண்டனர்.

உக்ரைன் படைகள் கேர்சன் நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதால் அந்நகரை விட்டு மக்கள் விரைவாக வெளியேறுமாறு ரஷ்ய அதிகாரிகள் உத்தரவு.

தவறான முறையில் வெற்றி பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹான்ஸ் நைமன், தன் மீது குற்றம் சுமத்திய மாக்னஸ் கால்சன் மற்றும் ஆன்லைன் செஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பறக்கும் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது

ஆணவக்கொலை செய்ததாக ஸ்பெயினில் பாக்கிஸ்தானைச் சேர்ந்த தம்பதி கைது. தங்கள் விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொண்ட மகளைக் கொன்றதால் கைது.

ரெட் புல் நிறுவனர் டைட்ரிச் மாடேசிட்ஸ் காலமானார். அவருக்கு வயது 78.

துபாய் அருங்காட்சியகத்தில் அமெக்கா என்ற பேசும் ரோபோ பார்வையாளர்களுடன் உரையாடி அசத்தியது.