அமெரிக்காவில் காதலனின் தொலைபேசியில் வேறொரு பெண் பேசியதால் ஆத்திரத்தில் கோபமடைந்த காதலி தனது காதலனின் வீட்டை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு பெண்ணின் குரலால் ஏற்பட்ட ஆத்திரம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த செனைடா மேடி சொடோ என்ற 23 வயதுடைய பெண், தனது காதலனுக்கு பேஸ்டைம் என்ற செயலியின் மூலம் வீடியோ அழைப்பில் கூப்பிட்டு உள்ளார்.
அப்போது காதலனின் தொலைபேசியில் வேறொரு பெண் எடுத்து பேசிவிட்டு அழைப்பை துண்டித்ததால், காதலி செனைடா மேடி சொடோ மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ளார்.
Senaida Marie Soto Facetimed, Her Boyfriend, to Show Herself Setting His House on Fire For Cheating on Her; Spoiler Alert She Was Mistaken About Him Cheating and is Now Going to Jaill Amazingly She Has a Pretty Low Bond https://t.co/KxSf9fPm64 pic.twitter.com/IzaRCvpu8e
— Robert Littal BSO (@BSO) November 23, 2022
இதையடுத்து கோபத்துடன் காதலனின் வீட்டிற்கு அதிகாலை 2 மணிக்கு சென்ற காதலி செனைடா மேடி, அங்குள்ள பல பொருட்களை திருடிவிட்டு காதலனின் வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ளார்.
அதை வீடியோ பதிவு செய்து காதலனுக்கும் அனுப்பியுள்ளார் செனைடா மேடி, இதனை பார்த்த காதலன் அறையை விட்டு வெளியே வருவதற்குள் வீடு முழுவதும் தீ பரவியுள்ளது.
Senaida Marie Soto – செனைடா மேடி சொடோ
காவல்துறை விசாரணை
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காதலி செனைடா மேரியை கைது செய்துள்ளனர்.
வீட்டிற்கு தீ வைத்தது தொடர்பாக செனைடா மேரியிடம் பொலிஸார் நடத்திய விசாரணை போது, “ என் காதலன் வேறொரு பெண்ணுடன் இருந்ததால் அவரது வீட்டை கொளுத்தினேன் என தெரிவித்துள்ளார்.
காதலியின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்துள்ள காதலன், இரவில் என்னுடைய வீட்டில் இருந்து உறவுக்கார பெண், அவள் விளையாட்டாக என்னுடைய காதலியிடம் பேசியுள்ளார், ஆனால் அதற்காக இவ்வளவு பெரிய சம்பவம் நடைபெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Senaida Marie Soto – செனைடா மேடி சொடோ(Facebook)
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகளோ, காயங்களோ ஏற்படவில்லை என்றாலும், ஏறத்தாழ 50,000 டாலர் மதிப்பில் உள்ள பொருட்கள் சேதமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.