ஓய்வூதிய சம்பளம் கிடைப்பதில்லை – மத்திய வங்கி ஆளுநர்

தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் 25 இலட்சம் ரூபா மாதாந்த சம்பளத்தை பெறுவதாகவும், இதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்திலும் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்வதாகவும் சமீபத்தில் அரசியல்வாதிகள் பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மைக்கு புறம்பானது என்று முற்றாக நிராகரித்தார்.

நேற்று (24) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ,இதுதொடர்பாக அவர் மேலும் தொவிக்கையில்,

தாம் பொறுப்புடன் கூறுவது என்வெனில் முதலாவதாக இந்த விடயங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கவலைக்குரிய விடயமாகும். நாட்டில் பொறுப்பு மிக்க அரசியல்வாதிகள் இவ்வாறு தெரிவிப்பதை அது உண்மை என அனைவரும் நம்புவார்கள். முதலாவது விடயம் எனக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எந்த ஓய்வூதிய கொடுப்பனவும் கிடைப்பதில்லை. இதனை பொறுப்புடன் கூறுகின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்தில் நான் மற்றும் மத்திய வங்கியில் எவரேனும் எந்த வகையிலாவது முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துகொண்டமை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவே ஆகும். அனைவருக்கும் கிடைத்த சம்பளம் எனக்கும் கிடைத்துள்ளது. இருப்பினும் தெளிவாக கூறி கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஓய்வூதிய சம்பளம் கிடைப்பதில்லை.

எனக்கு 25 இலட்சம் ரூபா கிடைப்பது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது .நான் மத்திய வங்கி ஆளுநர் என்ற ரீதியில் நான் மத்திய வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரி என்ற ரீதியில் 29 வருடகாலம் பணியாற்றியதற்காக எனக்கு ஓய்வூதியம் கிடைக்கின்றது. மத்திய வங்கி ஆளுநர் என்ற ரீதியில் கடமைக்கு வந்தேன் இதுவரை காலம் இருந்த அனைத்து ஆளுநருக்கும் கிடைக்கும் சம்பளம், வாகனம் ,வீடு கிடைக்குமாயின், அதுவே எனக்கும் கிடைக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.