இந்தியாவை கதிகலங்க வைத்த கொலை வழக்கு: பொலிஸ் வேனை வாள்களுடன் துரத்திய கும்பல்


இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பொலிஸ் வாகனத்தை கும்பல் ஒன்று வாள்களுடன் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொலிஸ் வேனை துரத்திய கும்பல்

டெல்லியில் காதலி ஷ்ரதா வாக்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆஃப்தாப் அமின் பூனாவாலாவை ஏற்றிச் சென்ற பொலிஸ் வேனை இன்று மாலை கூர்மையான வெட்டு வாள்களுடன் ஒரு கும்பல் துரத்தியது.

பொலிஸ் வேனுக்கு முன்னால் நின்ற ஒரு காரில் இருந்து வெளி வந்த 5 பேர் வாள்களை வீசிக்கொண்டு வேனை குறிவைத்து தாக்கினர். பொலிஸார் ஆயுதங்களை எடுத்து அவர்களை எதிர்கொண்டனர்.

இந்தியாவை கதிகலங்க வைத்த கொலை வழக்கு: பொலிஸ் வேனை வாள்களுடன் துரத்திய கும்பல் | Police Van Carry Aaftab Poonawala Attacked Delhi

பொலிசார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர், பூனாவாலா பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பாலிகிராஃப் சோதனைக்குப் பிறகு, மேற்கு தில்லியின் தடய அறிவியல் ஆய்வகத்தில் இருந்து பூனாவாலாவை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றபோது, எஃப்எஸ்எல் கட்டிடத்திற்கு வெளியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்து சேனா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது

இந்த தாக்குதலுக்கு இந்து சேனா என்ற வலதுசாரி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த அமைப்பின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆஃப்தாப் ஒரு இந்துப் பெண்ணை எப்படி துண்டு துண்டாக வெட்டினார் என்பதை முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

இந்த திடீர் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பெயர்கள் நிகம் குஜ்ஜர் மற்றும் குல்தீப் தாக்கூர் என்றும் அவர்கள் குருகிராமில் வசிப்பவர்கள் என்றும் கூறியுள்ளனர். தாங்கள் இந்து சேனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் கூறினர். இதனை காவல்துறை சரிபார்த்துவருகிறது.

பூனாவாலா தனது திகார் சிறை எண் 4-ல் கமெரா கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவை கதிகலங்க வைத்த கொலை வழக்கு: பொலிஸ் வேனை வாள்களுடன் துரத்திய கும்பல் | Police Van Carry Aaftab Poonawala Attacked Delhi



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.