கௌரவ விரிவுரையாளர்களுக்கு விரைவில் பணியிட மாற்ற கலந்தாய்வு! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

தமிழக அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வு நடைபெறும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் “தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 580 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிட மாற்றம் கோரி உயர்கல்வித்துறைக்கு விண்ணப்பித்துள்ளனர். 

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஏற்றார் போல் பணி நியமனம் செய்ய கலந்தாய்வு கூடிய விரைவில் நடைபெறும். அதற்கான அறிவிப்புகள் உயர் கல்வித்துறை இணையதளம் வாயிலாக தெரிவிக்கப்படும். மாநில கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதி கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்.

 

மாநில கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக விடுதி ரூ.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. ஆன்லைன் ரம்மி உட்பட மற்றும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ரவி விரைந்து முடிவெடுப்பார் என்று நம்புகிறோம். ஆன்லைன் சட்டம் குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது. ஆளுநரை சந்திப்பதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அனுமதி கேட்டார் ஆனால் இன்று வரை வழங்கப்படவில்லை. எங்கள் அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என செய்தியாளர்கள் சந்திப்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்குடி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.