புதுடில்லி :உலகளவில் செயற்கைக்கோள் தொலைதொடர்புக்கான அலைக்கற்றை ஏலத்தை, முதன்முதலாக நடத்த உள்ள நாடாக இந்தியா தான் இருக்கும் என, ‘டிராய்’ எனும், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பி.டி., வகேலா கூறியுள்ளார்.
இந்தியாவில் தற்போது தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள், செயற்கைக்கோள் வழியாக தொலைதொடர்பு சேவைகளை வழங்குவதற்கு, அலைக்கற்றை ஏலத்தை நடத்துமாறு கோரி வருகின்றன.இதையடுத்து, 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் போன்று, இந்த செயற்கைக்கோள் தொலைதொடர்பு சேவைக்கான ஏலத்தையும் நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.இது குறித்து, வகேலா மேலும் கூறியுள்ளதாவது:
இந்தத் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு, தகவல் மற்றும் ஒலிபரப்பு, விண்வெளி, தொலைதொடர்பு போன்ற பல்வேறு மைச்சகங்களிலிருந்து தேவையான அனுமதிகளை வழங்குவதற்கான பரிந்துரைகளை விரைவில் டிராய் வழங்கும்.இத்தகைய சேவைக்கான அலைக்கற்றை ஏலத்தை நடத்தும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என கருதுகிறேன். இதன் வாயிலாக, நாட்டுக்கு அதிகளவில் முதலீடுகள் வரும்.அதேசமயம், தற்போது இருக்கும் தொலைதொடர்பு துறையை கொன்றுவிடுவதாக அது அமைந்துவிடக் கூடாது. இது குறித்து கவனமாக இருக்கிறோம்.விரைவில் ஏலம் குறித்த ஆலோசனைகளை டிராய் வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement