அங்கொட டயர் சந்தி என்ற பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பிரதேசத்தில் வீடொன்றின் கட்டிலின் கீழ் மிகவும் ரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட ஹேரோயின் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் எடை 12 கிலோ கிராம் ஆகும்.
பொலிஸ் விசேட அதிரடி பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுதொடர்பான முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.
இந்த போதை பொருளுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போதை பொருளின் பெறுமதி 32 கோடி என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த போதை பொருள் பிரபல போதை வர்த்தகரான ஜில் என்பவருக்கு சொந்தமானது என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரவு மேலும் தெரிவித்துள்ளது.