நம்முடைய தேசத்திற்கு சேவையாற்றிய பழம்பெரும் வீரர் மறைவு; பிரதமர் இரங்கல்..!!

கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இந்த போரில் இந்தியா சார்பில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த நாயக் அந்தஸ்து பெற்ற வீரரான பைரோன் சிங் ரத்தோர் பங்கேற்று, பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக கடுமையாக போரிட்டார். அவரது வீரதீர செயலுக்காக கடந்த 1972-ம் ஆண்டு சேனா விருது வழங்கப்பட்டது. இதன்பின்பு, 1987-ம் ஆண்டு நாயக் ஆக பணியில் இருந்து ரத்தோர் ஓய்வு பெற்றார். கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும், அதில் பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 81.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நம்முடைய தேசத்திற்கு சேவையாற்றியதற்காக வீரர் (ஓய்வு பெற்ற) பைரோன் சிங் ரத்தோர் நினைவு கூரப்படுவார். நமது தேச வரலாற்றில் நெருக்கடியான நேரத்தில் பெரும் துணிச்சலை வெளிப்படுத்தியவர். அவரது மறைவால் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த துயரம் நிறைந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் கலந்துள்ளன. ஓம் சாந்தி என தெரிவித்து உள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.