பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 9.35,10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 23,24-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று முதல் 24-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 9.30,10 மற்றும்11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20,11.40,11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 23 மற்றும் 24-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.