Ullas Pandalam:வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கிய காமெடி நடிகரின் மனைவி

மலையாள நடிகர் உல்லாஸ் பந்தளத்தின் மனைவி ஆஷா கேரளாவில் இருக்கும் தன் வீட்டில் பிணமாகக் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

உல்லாஸ் பந்தளம்மலையாள படங்களில் நடித்து வருபவர் உல்லாஸ் பந்தளம். தொலைக்காட்சி சேனல்களில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன் பிறகே படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மம்மூட்டியின் தெய்வந்தின்டே ஸ்வந்தம் க்ளீடஸ் படம் மூலம் மல்லுவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
காணவில்லைஉல்லாஸ் பந்தளம் தன் மனைவி ஆஷா, மகன்கள் இந்திரஜித், சூர்யஜித்துடன் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் தன் மனைவி ஆஷாவை காணவில்லை என்று பத்தனம்திட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் உல்லாஸ். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உல்லாஸின் வீட்டிற்கு விசாரணைக்காக வந்தார்கள்.
ஆஷாஉல்லாஸின் வீட்டை சோதனை செய்தபோது முதல் மாடியில் ஆஷா தூக்கில் பிணமாகத் தொங்கியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஆஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
வீடுபோலீஸ் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆஷா இறந்தபோது உல்லாஸ் வீட்டில் தான் இருந்திருக்கிறார். இறப்பதற்கு முந்தைய நாள் ஆஷா தன் பிள்ளைகளுடன் முதல் மாடியில் படுத்து தூங்கியிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தகராறுஇன்று காலை தான் ஆஷாவை பிணமாக கண்டுபிடித்தார்கள். நேற்று ஆஷாவுக்கும், உல்லாஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்தே பிள்ளைகளுடன் மாடியில் படுத்து தூங்கினாராம். சண்டை முடிந்து சிறிது நேரத்தில் ஆஷாவை தேடிச் சென்றேன். ஆனால் பிள்ளைகள் மட்டும் தான் மாடியில் இருந்தார்கள், அவர் இல்லை. இதையடுத்து வீடு முழுவதும் தேடினேன். ஆஷா எங்கும் இல்லை. அதன் பிறகே ஆஷாவை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் என உல்லாஸ் கூறியிருக்கிறார். அண்மையில் தான் புது வீட்டில் குடியேறினார்களாம்.
தந்தைஆஷாவின் தந்தை சிவானந்தன் கூறியிருப்பதாவது, என் மருமகனுக்கும், மகளுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. மனநல பிரச்சனைகளால் ஆஷா தற்கொலை செய்திருக்கக்கூடும். உல்லாஸ் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் மீது புகார் கொடுக்க மாட்டோம் என்றார். பெத்த அப்பாவே இப்படி சொல்வதால் உல்லாஸ் மீது எந்த தவறும் இருக்காது என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.இருப்பினும் சின்ன பிரச்சனை ஏற்பட்டதற்காக இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு ஆஷா இப்படி அவசரப்பட்டிருக்கக் கூடாது என்றும் சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர். ஆஷா எடுத்த முடிவு குறித்து அறிந்தவர்கள் உல்லாஸுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.