"வரலாறு தெரியுமா… தைரியமிருந்தால் தனிக்கட்சி தொடங்கிப்பார்..!" – இ.பி.எஸ்-ஸுக்கு ஓ.பி.எஸ் சவால்

ஓ.பி.எஸ் அணியில் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

ஓ.பி.எஸ் அணி மாவட்டச் செயலாளர் கூட்டம்

அப்போது மேடையில் எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசிய ஓ.பி.எஸ், “என்ன மணி அடித்தாலும் இன்னைக்கு அவர் பப்பு வேகாது. உனக்கு தைரியம் இருந்தால் நீ தனி கட்சி நடத்திப் பார். வீதியில் வந்து நான் தனி கட்சி தொடங்கப் போகிறேன் என்று சொல்லிப்பார். நீ எங்கே போய் விழுவாய் என்று உனக்கே தெரியாது. பல ஆயிரக்கணக்கான உயிர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இந்த இயக்கத்தை இன்றைக்கு நீங்கள் கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது.

ஓ. பன்னீர்செல்வம்

பெரிய தலைவர் அவரு… யாரப்பா நீ… புரட்சித்தலைவரை நேரில் பார்த்து பேசி இருக்கியா… வரலாறு தெரியுமா உனக்கு… அம்மாவின் வழிகாட்டுதலில் ஜீரோவில் இருந்த பேங்க் பேலன்ஸ் 756 கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. அதிலிருந்து வருகின்ற வட்டியை வைத்து இன்றைக்கு கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் தொண்டர்களின் உழைப்பு. ஆனால் அவர்கள் தன்வசப்படுத்திய வங்கிக் கணக்கிலிருந்து முறையாக செலவழிக்கவில்லை என்றால் சட்ட விதிப்படி மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி

எத்தனையோ முறை சொல்லி விட்டேன் தம்பி பாதை மாதிரி போன ஊர் வந்து சேராதப்பா-னு… கேக்கணுமில்ல. நான் முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் மிகப்பெரிய உதவி செய்தார். பத்து லட்சம் பேர் மெரினாவில் கூடிட்டாங்க, தினமும் போராட்டம். நான் எவ்வளவோ பேசி பாத்துட்டேன். வேற வழியில்லாமல் நான் அவரிடம் போய் சொன்னேன். 24 மணி நேரத்தில் அரசாணையைத் தந்தார். இன்றைக்கு தமிழக முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு மூல காரணம் பிரதமர்தான்.

ஓ. பன்னீர்செல்வம்

இதுவரைக்கும் அந்த நான்கரை ஆண்டுக்காலம் ஆட்சி நடைமுறையில் நான் ஏதாவது தவறு செய்திருக்கிறேன் என்று பகிரங்கமாகச் சொன்னால் நான் மன்னிப்பு கேட்கத் தயார். இந்த நான்கரை ஆண்டுக்காலம் நான் ஏமாற்றப்பட்டேன். ஆனால் இன்றைக்கு எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நாளை இந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கக் கூடியவர்கள் அ.தி.மு.க-வின் தொண்டராகத் தான் இருப்பார். அந்த நிலையை நாங்கள் உருவாக்குவோம். யார் எந்த செயல்திட்டம் போட்டாலும் அதைப் பற்றி கவலை இல்லை. அதையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடுவோம்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.