தோல்வி அடைந்த காதல் திருமணம் ! மச்சினியுடன் ஓடிப் போன மாப்பிள்ளை!

மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அல்லது கருத்து வேறுமை காரணமாக, பிரிந்து போன பல சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இது ஒரு வித்தியாசமான அதிர்ச்சி அளிக்கும் சம்பவம். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் நடந்துள்ளது. அங்கு வாழ்ந்தால்  ஒன்றாக வாழ்வோம், இறந்தால் ஒன்றாக இறப்போம் என சபதம் செய்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பிரிந்து சென்று விட்டனர். ஆனால் பின்னர் அவர் காதலியை விட்டுவிட்டு தனது மச்சினியான அவரது தங்கையுடன் ஓடிவிட்டார்.

தோல்வியில் முடிவடைந்த காதல் திருமணம் 

உண்மையில், இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் நடந்து உள்ளது. இங்குள்ள கோட்வாலி பகுதியில் இருந்து, தனது காதலியை திருமணம் செய்து கொண்ட நிலையில், பின்னர் தனது காதலியின் தங்கையை காதலித்து, அவருடன் ஓடிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு மட்டுமே அந்த காதல் ஜோடி ஒன்றாக வாழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மச்சினியுடன் காதல் விவகாரம்

திருமண வாழ்க்கையில் அடிக்கடி சண்டை சச்சர்வு ஏற்பட்டு வந்த நிலையில், மாப்பிள்ளைக்கு இளைய மச்சினியுடன் காதல் ஏற்பட்டது. மாமியார் வீட்டிற்குச் செல்லத் தொடங்கிய போது, மச்சினியும்  மாப்பிள்ளையும் காதலிக்க தொடங்கினர். சமீபத்தில், இரண்டு நாட்களுக்கு முன், மாமியார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை, தனது மைத்துனியுடன் ஊரை விட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கணவருடன் தனது சகோதரி தலைமறைவான தகவல் அறிந்ததும் ஆத்திரமடைந்த மனைவி, புகுந்த வீட்டிலிருந்தும் தனது தாய் வீட்டில் இருந்தும் வெளியேறினார்.

பஞ்சாயத்து  எடுத்த முடிவு

யாரும் வேண்டாம் என அனைவரையும் பிரிந்த  அந்த மனைவி தனது தோழியின் இடத்தை அடைந்து யாருடனும் பேசுவதை நிறுத்தினாள். மறுபுறம் இரு குடும்பத்தினருக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியது. இச்சம்பவம் குறித்து, மாப்பிள்ளை மனைவியை விவாகரத்து செய்து விட்டு, மச்சினியை திருமணம் செய்ய பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இரு தரப்பினரும் போலீசாரிடம் செல்ல வேண்டாம் என முடிவெடுத்தனர். பஞ்சாயத்து செய்த முடிவுக்கு இரு தரப்பினரும் இசைந்தனர். புதிய காதல் ஜோடியின் ஆசையும் அதுதான். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை சமாதானப்படுத்த குடும்பத்தினர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.