ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி பெயில் ஆக்கிய பேராசிரியர் கைது| The professor who made the student bail after refusing to comply with the request was arrested

கோட்டா, ராஜஸ்தானில் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், ஆசைக்கு இணங்க மறுத்ததற்காக, தான் நடத்தும் பாடத்தில் அந்த மாணவியை ‘பெயில்’ ஆக்கிய தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவிக்கு, உடன் படிக்கும் மாணவி வாயிலாக, பேராசிரியர் ஒருவர்பாலியல் தொல்லை தந்துள்ளார்.

இந்த மாணவி குறித்து, பேராசிரியரும், சக மாணவியும் ஆபாசமாக பேசிய ‘ஆடியோ’ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதில் அதிர்ச்சி அடைந்த மாணவி, உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது பற்றி போலீசார் கூறியதாவது:

ஆசைக்கு இணங்க மறுத்த மாணவியை, பேராசிரியர் தான் நடத்தும் பாடத்தில் பெயிலாக்கி உள்ளார். இதே போல் மற்றொரு மாணவியிடமும் பேராசிரியர் பாலியல் தொல்லை தந்துள்ளார்.

இதையடுத்து இருவரிடம் புகார் மனுக்கள் பெற்று, பேராசிரியரையும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மாணவியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.