திகார் சிறையின் முன்னாள் டிஜிபி சஸ்பெண்ட்

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையின் மாஜி டிஜிபி சந்தீப் கோயல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த மோசடி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அக்டோபர் 7ம் தேதி சிறையில் இருந்து டெல்லி ஆளுநருக்கு சுகேஷ் கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்தில், சிறையில் தனது பாதுகாப்புக்காக சிறை அதிகாரிக்கு ரூ.12.5கோடி லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் ஆளும் ஆம் ஆத்மியில் முக்கிய பொறுப்பு வழங்குவதற்காக ரூ.50 கோடி மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ரூ.10கோடி கொடுத்ததாக தெரிவித்து இருந்தார். இந்த குற்றச்சாட்ைட அடுத்து கடந்த மாதம் திகார் சிறை டிஜிபி சந்தீப் கோயல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் டிஜிபியாக இருந்தபோது கடமையில் இருந்து தவறியதாக புகாரில் சந்தீப் கோயல் உள்துறை அமைச்சகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் உத்தரவில் அதற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.