ஐடிஐ படித்தவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்..!

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற மாணவர்கள் இன்று (டிச.26) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் ஐடிஐ படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற மாணவர்கள் இன்று முதல் ஜனவரி 3-ம் தேதி வரை அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.