தேனி மாவட்டத்தில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் காளீஸ்வரிக்கும், ராஜா என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை காதலித்து வந்த காளீஸ்வரி, திருமணத்திற்கு பிறகும் அவருடன் பழகி வந்துள்ளார்.
இதனால் காளீஸ்வரியின் பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து வினோத்தை கண்டித்துள்ளனர். இருப்பினும் வினோத், காளீஸ்வரியுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று நள்ளிரவு காளீஸ்வரியை வினோத் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதைப் பார்த்து வினோத்தின் பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் காளீஸ்வரியை தகாத வார்த்தையால் திட்டி அடித்துள்ளனர். இதனால் வேதனையடைந்த காளீஸ்வரி அதே பகுதியில் இருந்த தோட்டத்திற்கு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காளீஸ்வரியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.