Thalapathy 67: 'தளபதி 67' படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபலம்: அடேங்கப்பா.. இவரா.!

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆடியோ லான்ச் என்பதை விட விஜய் ரசிகர் மன்ற மாநாடு என்று சொல்லும் அளவிற்கு மாஸ் காட்டியுள்ளனர் விஜய்யின் ரசிகர்கள். நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சும், செயலும் ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை கிளப்பியுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகவுள்ளது விஜய்யின் ‘வாரிசு’ படம். தமிழ், தெலுங்கு மொழியில் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப்படத்தை தொடர்ந்து அவரின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ‘வாரிசு’ படத்தினை விட ‘தளபதி 67’ படத்தின் அறிவிப்பிற்காக தான் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ், கமலின் ‘விக்ரம்’ படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். கமலின் அதிதீவிர ரசிகரான லோகேஷ் அவரது நடிப்பிலே ‘விக்ரம்’ படத்தினை இன்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து அனைவரையும் வியக்க வைத்தார். கடந்த மே மாதம் வெளியான இந்தப்படம் திரையுலக பிரபலங்களின் பாராட்டு மற்றும் வசூல் மழையில் நனைந்தது.

‘விக்ரம்’ படத்தினை தொடர்ந்து மீண்டும் விஜய்யை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘தளபதி 67’ ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்தில் விமர்சனரீதியாக எழுந்த சர்ச்சைகளை சரிகட்ட போவதாகவும், இந்தப்படம் ழுழுக்க தன்னுடைய பாணியில் இருக்க போவதாகவும் லோகேஷ் பேட்டிகளில் கூறி வருகிறார்.

Sneha Prasanna: தீயாய் பரவிய விவாகரத்து வதந்தி: பதிலடி கொடுத்த சினேகா – பிரசன்னா.!

இந்நிலையில் இந்தப்படத்தில் நடிப்பதை பிரபல வில்லன் நடிகர் உறுதி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் மூத்த வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், ‘தளபதி 67’ படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தளபதியின் முதல் படத்திலிருந்து நான் அவருடன் நடித்தேன். நாங்கள் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம்.

Suriya: அடேங்கப்பா.. சூர்யாவோட இந்த மனசு யாருக்கு வரும்: குவியும் பாராட்டுக்கள்.!

சமீப காலமாக என்னால் அவருடன் நடிக்க முடியவில்லை. விஜய்யின் அடுத்தப் படத்தில் அவருடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகானின் தீவிர ரசிகரான லோகேஷின் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்தப்படத்தின் பூஜை அண்மையில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.