இந்தியாவில் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்தது லாவா X3 ஸ்மார்ட்போன் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா X3 (2022) போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இன்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா X3 (2022) போன் விற்பனைக்கு வந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.5 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட்-கோர் பிராசஸர்
  • 3ஜிபி ரேம்
  • 32ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 12 கோ இயங்குதளம்
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிராண்ட் கேமரா
  • 4,000mAh பேட்டரி
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது
  • இதன் விலை ரூ.6,999

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.