டிஸ்சார்ஜ் ஆகும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு (வயது 63) நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டார். வயிற்றுப்பிரச்சினை, காய்ச்சல் அறிகுறிகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும், சிகிச்சை முடிந்து நாளை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.