TN Assembly Elections 2026: தேர்தல் பெருவிழாவின் க்ளைமாக்ஸ்; வாக்குப்பதிவுக்குத் தயார் நிலையில் தமிழ்நாடு!

2026 சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கவிருக்கிறது. வழக்கம்போல் இல்லாமல் இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக இதுவரை தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைக் கைப்பற்றியது கிடையாது.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்

அந்த எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, அதிமுக, நாதக, தவெக போன்ற கட்சிகளும் களம் காண்கின்றன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் காணும் முதல் தேர்தல் இது. இவருடைய வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் பலமாக இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
சீமான்

தமிழகத்தில் மொத்தம் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. வெளியூரில் வசிக்கும் வாக்காளர்களும் வாக்கு செலுத்தி அவரவர் ஜனநாயகக் கடமையை ஆற்ற, அவர்களின் சொந்த ஊருக்குக் கிளம்பியிருக்கிறார்கள். நாளை காலை வாக்குப்பதிவு தொடங்கவிருக்கும் நிலையில், துப்பாக்கி ஏந்திய காவல் அதிகாரிகளின் பாதுகாப்புடன் தமிழகமெங்கும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இப்படி நாளை நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவிற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வாக்குப்பதிவு தொடர்பான அப்டேட்டுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள விகடனுடன் இணைந்திருங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.