வாடிகன்: முன்னாள் போப் 16 ம் பெனடிக் உடல்நலக்குறைவால் காலமானாதாக வாடிகன் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 95.
உடல்நிலை மற்றும் வயதை காரணம் காட்டி, கடந்த 2013 ல் தாமாக முன்வந்து போப் 16 ம் பெனடிக்ட் பதவி விலகினார். முதுமை காரணமாக , வாடிகனில் ஓய்வில் இருந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையறிந்த, தற்போதைய போப் முதலாம் பிரான்சிஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், இன்று (டிச.,31) காலை 9:34 மணியளவில், வாடிகனில் முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார் என வாடிகன் செய்தித்தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement