வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரான்ஸ் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக டில்லியில் தரையிறங்கியது.
ஏர் இந்தியா B787-800 விமானம் புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்திலிருந்து 210 பயணிகளுடன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நோக்கி புறப்பட்டது. அப்போது நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக புதுடில்லி இந்திரா காந்தி விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவசர அவசரமாக தரையிறங்கியது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
![]() |
மற்றொரு சம்பவம்
(மும்பை- ராய்ப்பூர் AIC 651 )ஏர் இந்தியா, மற்றும் (ஆமபாத்பாத்- ராய்ப்பூர் IGO 6687 )இண்டிகோ ஆகிய இரு விமானங்களும் திட்டமிட்டபடி இன்று சத்தீஷ்கர் தலைநகர் ராய்ப்பூர் விமான நிலையம் வந்திறங்க வேண்டிய நிலையில் அங்கு மோசமான வானிலை காரணமாக தரையிறக்க வேண்டாம் என விமான கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்ததால், இரு விமானங்களும் ஓடிசா மாநிலம் புவனேஸ்வரம் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த பயணிகள் ஊர் திரும்ப மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement