நடிகைகளைத் தவறான கோணத்தில் வீடியோ, போட்டோ? – கண்டிக்கும் ருக்மணி வசந்த்; பின்னணி என்ன?

காந்தாரா திரைப்படத்தின் நடிகைகள் ருக்மணி வசந்த், சப்தமி கௌடா ஆகியோரது இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைராலாகி வருகிறது.

அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது…

“திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு நடக்கும் ஒரு பிரச்னையைத் தீர்க்க இணைந்துள்ளோம்.

பொது நிகழ்வுகளில் நடிகைகள் கலந்துகொள்ளும்போது, அவர்களின் வீடியோ மற்றும் போட்டோக்கள் தவறான கோணங்களில் பகிரப்படுக்கின்றன… மேலும், எங்களது உடல் ஜூம் செய்யப்படுகின்றன.

ஒரு சிலர் செய்யும் இந்த நடவடிக்கை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இன்ஸ்டா ஸ்டோரி
இன்ஸ்டா ஸ்டோரி

நாங்கள் இங்கே கலைக்காகவும், சினிமாவிற்காகவும் இருக்கிறோம்.

வேண்டுமென்றே இப்படிப் பரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டிக்கிறோம். அவைக் கண்ணியத்தை மீறுவதாகும்.

இதைப் பொறுத்துக்கொள்ளவோ முடியாது.

இந்த மாதிரியான நிகழ்வுகள் தொழில்முறை சார்ந்தும், அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியம் சார்ந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதற்கான எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இந்தப் பிரச்னை நடந்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்”.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.