கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் பூஜா ராமச்சந்திரன். இவர் இந்திய திரைப்பட நடிகை, VJ மற்றும் மாடல் அழகி ஆவார். இவர் அழகுப் போட்டிகளில் பங்கேற்று மிஸ் கோயம்புத்தூர் 2004 பட்டத்தை வென்றார் அதை தொடர்ந்து மிஸ் கேரளா 2005 போட்டியில் பங்கேற்று, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பின்னர் இவர் SS மியூசிக்கில் VJ வாக பணிபுரிந்தார். அதேபோல் பிக் பாஸ் தெலுங்கு 2 இல் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
நடிகை பூஜா ராமச்சந்திரன் ஏற்கனவே SS மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே. கேரிக் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கடந்த 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து நடிகர் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஜான் கொக்கேன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஜான் கோக்கேனுக்கும் இது இரண்டாவது திருமணம்தான். ஏற்கனவே நடிகை மீரா வாசு தேவனை காதலித்து திருமணம் செய்து ஜான் கோக்கேன் பின்னர் அவரை விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் நடிகை பூஜா ராமச்சந்திரன். இப்போது நடிகை பூஜா ராமச்சந்திரன் வயிற்றில் குழந்தையுடன் தலைக்கீழாக நின்றப்படி யோகா செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் அவர்., நீங்கள் சரியான யோகா ஆசிரியர் இல்லாமல் இந்த யோகாவை பயிற்சி செய்யாதீர்கள் எனவும் வார்னிங் நோட் கொடுத்துள்ளார்.
நடிகை பூஜா ராமச்சந்திரன் , ‘பீட்சா’, ‘களம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘காஞ்சனா 2 ‘ போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழை தவிர மலையாளம் , தெலுங்கு என பல படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘அந்தகாரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பூஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.