சிவகங்கை:
சிங்கம்புணரியில் உள்ள சமுதாய கூடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து
ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகம்
கட்டுவதற்காக சமுதாய கூடத்தை இடிக்க தடை விதிக்கக் கோரி சந்திரன் என்பவர்
வழக்கு தொடர்ந்தார். டவுன் பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்பட்டால் போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டு, பள்ளி குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாவர் என மனு
அளிக்கப்பட்டது. சிவகங்கை ஆட்சியர், வருவாய் அலுவலர், சிங்கம்புணரி டவுன்
பஞ்சாயத்து தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை ஆணையிட்டுள்ளது.
