எல்லையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு| Intensive surveillance in border areas

புதுடில்லி :குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி, நம் நாட்டின் கடற்கரை உள்ளிட்ட அனைத்து எல்லையோர பகுதிகளிலும், பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுதும் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது.

இதையடுத்து நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக எல்லையோரப் பகுதிகளில் நம் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய பகுதிகளில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப்பாதுகாப்பு படை விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜன., 21 – 28ம் தேதி வரை இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் ‘ஆப்பரேஷன் அலெர்ட்’ என்ற பெயரில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி பாகிஸ்தானை ஒட்டியுள்ள நம் எல்லைகளில் மட்டுமின்றி கடலோர பகுதிகளிலும், பயங்கரவாத சதி செயல்களை முறியடிக்கும் விதமாக பாதுகாப்பு படையினர், கடும் பனிப் பொழிவையும் பொருட்படுத்தாது தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.