கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டம் விஜிலாபுரம் நகரை சேர்ந்தவர் சோம்சேகர். இவர் தன்னுடைய மனைவி மற்றும் நான்கு வயது மகன் சரண் உள்ளிட்டோருடன் சேர்ந்து சென்னையில், உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார்.
அங்கு தனது குடும்பத்துடன் கோவிலில் உள்ள புராதன சின்னங்கள் அனைத்தையும் பார்த்து அவற்றுடன் புகைப்படம் எடுத்து ரசித்தனர்.அதன் பின்னர், அருகிலுள்ள கடற்கரைக்கு சென்று, கடல் அலையின் அழகை ரசித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கடல் அலையின் சீற்றம் அதிகமாக வந்தது. இதைப்பார்த்து அங்கிருந்த அனைவரும் தலை தெறிக்க ஓடினர். ஆனால், நான்கு வயது சிறுவன் சரண் திடீரென மாயமானான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சோம்சேகர், சிறுவனை தேடியுள்ளார். ஆனால், அவர் கிடைக்கவில்லை.
ஆகவே, தனது மகன் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு இருப்பாேனா என்று பதறியா சோமசேகர், சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் கடற்கரை பகுதி முழுவதும் சிறுவனை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சிறுவன் சரண் கடற்கரை கோவிலின் அருகே சுற்றுலா பயணிகள் கூட்டத்தின் நடுவே அழுதபடி நிற்பதை கவனித்தனர். பின்னர், சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர்கள் போலீசாருக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளனர்.