Rashmika Mandanna: என்னங்க பிரச்சனை? சினிமாவ விட்டு போகணுமா? நொந்து போன விஜய் ஹீரோயின்!

தன் மீது வெறுப்பை பரப்புகிறார்கள் என வேதனைப்பட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார். கன்னடம் தெலுங்கு என பிஸியாக இருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ் திரையுலகில் சுல்தான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
மீண்டும் காதலில் விழுந்த ஓவியா?

ரக்ஷித் ஷெட்டியுடன் காதல்
சமீபத்தில் விஜய் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்ந்தார் ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் காதல் கிசுகிசுக்களுக்கும் நெருங்கிய பந்தம். ஆரம்ப காலத்தில் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் காதல் சர்ச்சையில் சிக்கி வந்தார். இவர்களின் காதல் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போனது.

Baakiyalakshmi: பாக்கியலெட்சுமி சீரியலில் இருந்து விலகும் கோபி பொண்டாட்டி? அதிர்ச்சி தகவல்!

விஜய்யுடன் டேட்டிங்
அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியானது. இருவரும் அடிக்கடி டின்னர் டேட்டிங் செல்லும் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வந்தது. சமீபத்தில் புத்தாண்டை கூட இருவரும் ஒன்றாகதான் கொண்டாடியதாக தகவல் பரவியது. அதற்கேற்றார் போல் அவர்கள் வெளியிட்ட போட்டோக்களுட் ஒரே ரெசார்ட்டில் எடுக்கப்பட்டதாக இருந்தது.
Bigg Boss Tamil 6: என்னது… அசீம் என் அக்கா மகனா… இல்லவே இல்லீங்க… வீடியோ வெளியிட்ட முக்கிய புள்ளி!

வெறுப்பு பரப்பப்படுகிறது
இதனால் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனையில் மனம் நொந்து போயி பேசியுள்ளார். அதாவது தனக்கு எதிராக வெறுப்பாக கருத்துக்கள் அதிகமாக பரப்பப்படுகிறது என்று வருத்தப்பட்டுள்ள ராஷ்மிகா மந்தனா, அது ஏன் என தனக்கு தெரியவில்லை என்றும் வேதனைப்பட்டுள்ளார்.
Bigg Boss Tamil 6, Kamal Haasan: காக்கா கக்கா போயிடுச்சா ஆண்டவரே… கமலை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

புண்படுத்துகிறதுஉடற் பயிற்சி செய்தால் ஆண் போன்று தெரிவதாக கூறுகிறார்கள், இல்லாவிட்டால் குண்டாக இருக்கிறேன் என்கிறார்கள், பேசாமல் இருந்தால் திமிர் பிடித்தவள் என்று கூறுகிறார்கள் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவை விட்டு விலக வேண்டும் என நினைக்கிறார்களா என்றும் என்னால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றும் கேட்டுள்ள ராஷ்மிகா மந்தனா, உங்களின் வார்த்தைகளை என்னை மன ரீதியாக புண்படுத்துகிறது என்றும் உருக்கமாக கூறியுள்ளார்.
Premgi: ‘என் புருஷன் கூட சேர்ந்துட்டேன்’… பாடகியுடன் பிரேம்ஜி ரகசிய திருமணம்? தீயாய் பரவும் வீடியோ!

Rashmika Mandanna

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.