திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.புனித அந்தோனியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் 400 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
