பிபிசி ஆவணப்படம் விவகாரம்; நாட்டை பிளவுபடுத்த சதி என பிரதமர் குற்றச்சாடு.!

‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான பிபிசியின் ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், இங்கிலாந்தில் 2001 முதல் 2006ம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா, பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் , கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் நேரடி காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இதையடுத்து, இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து யூ-டியூபில் வெளியான இந்த ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், உண்மையை கண்டு பிரதமர் மோடி அஞ்சுவதாக தெரிவித்தது. அதேபோல் இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் பேணப்பட வேண்டும் என்று அமெரிக்காவும் கருத்து தெரிவித்தது.

இந்த பிண்ணனியில் நாட்டை பிளவுப்படுத்த சதி நடப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய கேடட் கார்ப்ஸ் (என்சிசி) பேரணி நடைபெற்றது. அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘ நாட்டின் அதிக இளைஞர்கள் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நோக்குகிறது. இளைஞர்களுக்காக டிஜிட்டல், ஸ்டார்ட் அப் மற்றும் புதுமைப் புரட்சிகளை தனது அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது.

நாட்டை உடைக்க பல சாக்குப்போக்குகள் எழுப்பப்படுகின்றன. பாரத அன்னையின் குழந்தைகளிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்காக பல பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. இதுபோன்ற முயற்சிகள் இருந்தபோதிலும், இந்திய மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்காது. ஒற்றுமையின் மூலம் மட்டுமே இந்தியா மகத்துவத்தை அடைய முடியும்.

பாதுகாப்புத் துறையில் முன்பு இறக்குமதி செய்யப்பட்ட தாக்குதல் துப்பாக்கிகள், இப்போது நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருப்பதை காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் கண்டுள்ளன. மூன்று ஆயுதமேந்திய எல்லைகளிலும் பெண்களை நிலைநிறுத்துவதற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது.

புனேவில் உள்ள நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் பெண் கேடட்களின் முதல் தொகுதி பயிற்சி தொடங்கியது. மேலும் 1500 பெண் மாணவர்கள் சைனிக் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராகுல் யாத்திரையில் மெஹபூபா முஃப்தி; மூக்கு சிவந்த பாஜக.!

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், என்சிசி இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான், ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், விமானப்படைத் தளபதி விஆர் சவுதாரி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கிர்தர் அர்மானே ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.