Singer Vani Jayaram Passed Away: பிரபல பின்னணி பாடகரான வாணி ஜெயராம் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (பிப். 4) காலமானார். அவருக்கு வயது 78. இவரின் இயற்பெயர் கலைவாணி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஓடியா, ,குஜராத்தி, அசாமி, துளு, பெங்காலி உள்ளிட்ட 19 மொழிகளில் அவர் பாடியுள்ளார். மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.
தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநில அரசுகளின் விருதுகளை பெற்றுள்ளார். இவருக்கு கடந்த குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றுள்ளார். இவர் 1973ஆம் ஆண்டு வெளியான தாயும் சேயும் படம் மூலம் இவர் அறிமுகமானார்.