தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு?

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்த காடு நல்ல விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றி பெறவில்லை. தற்போது சிம்புவின் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் பத்து தல. இப்படம் வரும் மார்ச் 30 அன்று வெளியாகிறது. சிம்புவின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின் உள்ளிட்டோர்களின் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில் இப்போது சிம்புவின் அடுத்த படத்தை ‛கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இவரின் ரஜினி படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இப்போது சிம்பு படத்தை இயக்குவது நடக்கும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.